latest

LATEST:

Grab the widget  IWeb Gator

Archives

gravatar

அலஹாபாத் உயர்நீதி மன்ற நீதிபதிகள் நேர்மையற்றவர்கள்: சுப்ரீம் கோர்ட் கண்டனம்!



மத உரிமைக்கும், சொத்துரிமைக்கும் விரோதமாகவும், உலக மக்களுக்கு அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் அளித்த அலஹாபாத் உயர்நீதி மன்றத்தின் பாபர் மசூதி குறித்த கட்டப் பஞ்சாயத்து தீர்ப்பு நடுநிலையாளர்களின் கடுமையான கண்டனத்திற்கு ஆளானது. தற்போது, அலஹாபாத் உயர் நீதி மன்ற நீதிபதிகள் குறித்து சுப்ரீம் கோர்ட் கடுமையான கண்டனத்தை பதிவு செய்துள்ளது.

சுப்ரீம் கோர்ட் டிவிஷன் பெஞ்ச், உத்தர பிரதேச மத்திய சன்னி வக்ஃபு வாரியம், ஒரு நிலம் விஷயமாக தொடர்ந்த வழக்கில், கடந்த 26.11.2010 வெள்ளியன்று பரபரப்பான தீர்ப்பினை வழங்கியது. அந்த தீர்ப்பில், அலஹாபாத் உயர் நீதி மன்ற நீதிபதிகள் குறித்து தங்களுக்கு பல புகார்கள் வந்த வண்ணம் உள்ளன; அலஹாபாத் உயர் நீதி மன்ற நீதிபதிகளுள் பலர் நேர்மையற்றவர்கள்; தங்களுக்கு வேண்டியவர்களுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கி வருகின்றனர்; இந்திய சட்டத்துறை குறித்த பொதுமக்களின் அடிப்படை நம்பிக்கையை தகர்க்கும் வண்ணம் அதிர்ச்சியளிக்கக்கூடிய பல தீர்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன என்று கடுமையாக சாடியுள்ளனர்.

மேலும், அலஹாபாத் உயர்நீதி மன்றத்தை களையெடுத்து சுத்தம் செய்ய வேண்டியுள்ளது; நீதிபதிகள் குறித்து வரும் புகார்கள், அவர்கள் இறையாண்மைக்கு எதிராக செயல்படுவதை உறுதிப்படுத்தியுள்ளது என்று நீதிபதி மார்க்கண்டேய கட்சு மற்றும் நீதிபதி கியான் சுதான் மிஷ்ரா ஆகியோர் தீர்ப்பளித்துள்ளனர். கடுமையான நடவடிக்கை எடுக்கக்கோரி அலஹாபாத் உயர்நீதி மன்ற தலைமை நீதிபதிக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

காவிகள் கடுமையாக ஊடுறுவி உள்ளனர் என்பதற்கு தற்போதைய சுப்ரிம் கோர்ட்டின் தீர்ப்பு சான்றாக அமைகின்றது. மசூதியை பாபர் தான் கட்டினார் என்பதற்கு ஆதாரம் கேட்ட நீதிமன்றம், ராமர் அங்கு தான் பிறந்தார் என்பதற்கு நம்பிக்கையை ஆதாரமாக ஏற்று, அநியாய தீர்ப்பினை அளித்தது இதே அலஹாபாத் உயர் நீதி மன்றம் தான். அலஹாபாத் உயர்நீதி மன்றத்தின் இலட்சணம் தற்போது சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளால் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளது.

“… ஒரு சமுதாயத்தின் மீதுள்ள பகை நீங்கள் நீதியாக நடக்காமலிருக்க, உங்களைத் தூண்ட வேண்டாம். நீதியாக நடங்கள்! அதுவே இறையச்சத்திற்கு நெருக்கமானது. … (குர்ஆன் – 5:8) ”

இதே போன்றே, பாபரி மஸ்ஜித் சட்ட விரோத தீர்ப்பை சுப்ரீம் கண்டித்து, தானாகவே முன்வந்து அவ்வழக்கை மறு விசாரணைக்கு உட்படுத்தி, முஸ்லிம்களுக்கு நீதி வழங்கி, இந்திய இறையாண்மை மீது சாதாரண குடிமக்களின் நம்பிக்கையை மெய்ப்படுத்த வேண்டும் என்பதே அனைத்து தரப்பு மக்களின் பேரவா. சுப்ரீம் கோர்ட் செய்யுமா?

gravatar

அமெரிக்காவை உதைத்து வெளியேற்றுவோம்…


மத்திய கிழக்கு ஆசியாவிலிருந்து அமெரிக்காவை உதைத்து வெளியேற்றுவோம் என்று ஆத்திரம் பொங்கப் பேசினார் ஈரான் அதிபர் அகமது நிஜாத். ஈரானின் எதிரிகளை நினைத்தாலே

ஆத்திரமாக வருகிறது என்றே அவர் பேசினார். அவர் குறிப்பிட்டது அமெரிக்காவைத்தான் என்பது அனைவருக்கும் நன்கு புரிந்தது.

“அணு ஆயுத தயாரிப்பில் ஈரான் ஈடுபடுவதால் அந்த நாட்டின் மீது அடுத்து என்ன நடவடிக்கை என்பதைத் தீர்மானிக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம் பல்வேறு நடவடிக்கைகள் எங்கள் முன்னால் தேர்வுக்கு இருக்கின்றன” என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா சமீபத்தில் பேசியிருந்தார். அதற்குப் பதிலடி தரும் வகையில் ஈரான் அதிபர் நிஜாத், தலைநகர் டெக்ரானில் வீட்டுவசதி திட்டத்தை நேற்று தொடங்கி வைக்கும்போது வெகு காட்டமாகப் பேசினார். அவர் மேலும் பேசியதாவது:-

அவர்களுக்கு (அமெரிக்கர்களுக்கு) என்ன துணிச்சல் இருந்தால் நம்மை (ஈரானை) இப்படி மிரட்டியிருப்பார்கள். நம்மை என்ன செய்யலாம் என்று தீர்மானிக்க அவர்களுக்கு பல முடிவுகள் மேசை மீது குவிந்து கிடக்கிறதாமே? உங்களுக்கு (அமெரிக்காவுக்கு) கடைசி காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. வெட்டியானுக்கு சொல்லி வையுங்கள். உலகம் முழுவதையும் வம்புச் சண்டைக்கு இழுத்து அப்பாவிகளை பலிவாங்கும் நீங்களே பலியாவதற்கு நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. மேற்கு ஆசியப் பகுதியை விட்டு வெளியேறுங்கள். இல்லாவிட்டால் இங்குள்ள எல்லா நாடுகளும் சேர்ந்து உதைத்து வெளியேற்ற வேண்டியதிருக்கும்.

2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் நாள் நியூயார்க், வாசிங்டன் நகரங்களின் மீது அல் கொய்தா பயங்கரவாதிகள்தான் தாக்கினார்கள் என்று உலகையே நம்ப வைத்தீர்களே? அதிலே எங்களுக்கு இன்னமும் சந்தேகம் நீடிக்கிறது.

அது தொடர்பான ஆயிரம் கேள்விகளுக்கு இன்னமும் விடை கிடைக்கவில்லை. இந்தக் கேள்விகளைக் கேட்பதிலிருந்து நாங்கள் ஓயமாட்டோம், திருப்திகரமான பதில்கள் கிடைக்கும்வரை ஓயமாட்டோம். 3,000 பேரை அந்தச் சம்பவங்களில் பலி கொடுத்துவிட்டதாக கூறுகிறீர்களே? உண்மையான கொலையாளிகளைக் கண்டுபிடித்து தூக்கில் போடுங்கள். அதற்கு நாங்கள் எல்லாவித உதவிகளையும் செய்யத்தயார். ஆனால் அதற்கு தகுந்த ஆதாரங்களை முதலில் தாருங்கள். ஜார்ஜ் புஷ்ஷாக இருந்தாலும் ஒபாமாவாக இருந்தாலும் இந்த கோரிக்கையை ஏற்கவே மாட்டார்கள் என்று உங்களுக்குச் சொல்கிறேன்.

அதிபர்கள் சொல்வதை அந்த நாட்டு மக்களே நம்பவில்லை, மற்றவர்கள் நம்புவது அப்புறம் இருக்கட்டும். இவ்வாறு அகமதி நிஜாத் பேசினார்

gravatar

கட்டப்பஞ்சாயத்து செய்வதற்கு அறுபது ஆண்டுகள் எதற்கு?


ஆயிரமாய் காவலர்கள் பாதுகாப்பு, ஊர்வலம் செல்லத்தடை, ஊரடங்கு என ஏகத்துக்கும் பீதியூட்டப்பட்ட தீர்ப்பு(!) வந்தேவிட்டது. சுற்றிவளைத்து இந்துப் பாசிச வெறியர்களின் செயல் சரியானது. அந்த இடத்தில் ராமர் கோவில் கட்டிக்கொள்ள‌லாம். என்பதுதான் தீர்ப்பின் சாராம்சம். மூன்று நீதிபதிகள் (அதில் ஒருவர் முஸ்லீம்) அடங்கிய பென்ச் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது. மசூதியாக இருந்ததை உடைத்துத் தள்ளிவிட்டு அந்த இடம் இந்துக்களுக்குச் சொந்தம் கோவில் கட்டிக்கொள்ளுங்கள், போனால் போகிறதென்று முஸ்லீம்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இடம் தருகிறோம் என்று சொன்னால் அதை தீர்ப்பு என்று கொள்ள முடியாது, கட்டப்பஞ்சாயத்து, ரவுடித்தனம்.
1992 மசூதி இடிப்பிற்கு பிறகு இந்தியா டுடே ஒரு கணிப்பை தொடர்ச்சியாக நடத்தியது. நடுநிலைமை என்ற பெயரில் அதில் கருத்துக்கூறிய அனைவரும் அந்த‌ இடத்தில் கல்லூரி கட்டவேண்டும், கக்கூசு கட்டவேண்டும் என்றார்கள். மசூதியை இடித்த பார்ப்பனிய வெறித்தனத்தை மறைத்து முற்போக்கு ஆய்வாக அந்த ஏடு அந்தக் கணிப்பை வெளியிட்டது. அந்த அளவுக்கான திரை மறைப்புகள் கூட தேவையின்றி நிர்வாணமாகவே தங்கள் பார்ப்பனச் சாய்வை வெளிக்காட்டியிருக்கிறது அலஹாபாத் உயர் நீதிமன்றம்.
இந்திய அரசியல் சாசனம் ஒன்று 1947 ஆகஸ்ட் 15 ல் இருந்தபடியே வண‌க்கத்தலங்கள் பராமரிக்கப்படும் என இருக்கிறது. இது இந்துக் கோவில்களை பாதுகாப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட விதி. ஏனென்றால் அனேக இந்துக் கோவிலகள் சமணம் பௌத்தம் உட்பட பிற மத வணக்கத்தலங்களை இடித்துக் கட்டப்பட்டவைதான். ஆனால் 1992 வரை மசூதியாக இருந்திருக்கிறது. 1951 வரை வண‌க்கம் நடத்தப்பட்டு வந்திருக்கிறது, அதுவும் 1949ல் மசூதிக்குள் இரவோடிரவாக திருட்டுத்தனமாக உள்ளே வைக்கப்பட்ட ராமன் சிலையின் காரணமாக ஏற்பட்ட வழக்கில் தடைவிதிக்கப்பட்டதினால் தான் 1951க்கு பிறகு வணக்கம் நடத்தப்படவில்லை. ஆனாலும் இந்த விபரங்களோ, விதியோ கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை.

ராமர் கோவிலை இடித்துத்தான் மசூதி கட்டப்பட்டது என்று ஒரு நீதிபதியும், ராமர் கோவில் இடிக்கப்படவில்லை ஆனால் ஏற்கனவே சிதிலமடைந்திருந்த கோவிலின் மேல் மசூதி எழுப்பப்பட்டது என மற்றொரு நீதிபதியும் முரண்பட்ட தீர்ப்பை கூறியிருக்கின்றனர். ஆனால் மூவரும் ஒன்றுபடும் இடம் அந்த இடத்தில் ஏற்கனவே கோவில் இருந்தது என்பதை தொல்லியில் ஆய்வுகள் நிரூபித்திருக்கின்றன என்பதுதான். தொல்லியல் துறை எந்த தடயங்களின் அடிப்படையில் கோவில் இருந்தது எனும் முடிவை வந்தடைந்தது? தொல்லியல் துறையின் ஆய்வு முடிவுகள் இதுவரை வெளியிடப்பட்டதாய் தெரியவில்லை. நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் செய்யப்பட்ட ரகசிய ஆய்வு என்றால், நாட்டின் மொத்த மக்களையும் நேரடியாகவோ மறைமுகமாகவோ பாதிக்கும் ஒரு பிரச்சனையில் ரகசிய ஆய்வின் அடிப்படையில் தீர்ப்பளிப்பது என்ன விதமான நடைமுறை? ஒரு இடம் யாருக்குச் சொந்தம் எனும் பிரச்சனையில் கோவிலை இடித்துத்தான் அல்லது கோவில் இருந்த இடத்தில் தான் மசூதி கட்டப்பட்டது என்று தொல்லியல் துறை நீரூபித்திருக்கிறது என்றால் முஸ்லீம்களுக்கு மூன்றில் ஒருபங்கு இடம் கொடுக்கவேண்டிய அவசியமென்ன?

அந்த இடம் யாருக்குச் சொந்தமானது என்பதில் இரு தரப்புக்குமே சரியான ஆவணங்கள் இல்லை என தங்கள் தீர்ப்பில் கூறியிருக்கிறார்கள். ஆனால் கடைசி அறுநூறு ஆண்டுகளுக்கும் மேலான அனுபவ உரிமை முஸ்லீம்களிடம் இருக்கிறது. எனும்போது இந்துக்களுக்கு சாதகமான தீர்ப்பின் பொருள் என்ன? அப்சல் குருவின் மீதான குற்றச்சாட்டுக்கு எந்தவிதமான ஆதாரமும் இல்லை என்றாலும் தேசத்தின் பெரும்பான்மை மனசாட்சியின் விருப்பத்தின் அடிப்படையில் தூக்குத்தண்டனை அளிக்கப்பட்டதே அதே அடிப்படையில் பெரும்பான்மை இந்துக்கள் என்பதால் அவர்களுக்கு அதிக இடம் ஒதுக்கி தீர்ப்பளிக்கப்பட்டதா? ஆயிரமாயிரம் ஆண்டுகள் வசித்துவரும் மலைவனம் என்றாலும் பழங்குடி மக்களிடம் ஆவணங்கள் எதுவும் இல்லை என்பதால் ஆளும் வர்க்கங்களின் விருப்பிற்கேற்ப அந்த மலைகளும் வனங்களும் பன்னாட்டு உள்நாட்டு தனியார் நிறுவனங்களுக்குச் சொந்தம் என்று பசுமை வேட்டை நடத்துகிறதே அரசு, அந்த அடிப்படையில் ஆளும் வர்க்கங்களின் விருப்பம் என்பதால் இந்துக்களுக்கு கோவில் கட்ட அனுமதி அளிக்கப்பட்டதா?

இது நல்லதொரு தீர்ப்பு. ஏதாவது ஒரு தரப்பாக தீர்ப்பளித்து நாட்டில் மீண்டும் கலவரங்களும் கொலைகளும் நடந்து அமைதி குலைந்துபோகாமல் இரண்டு தரப்பையும் அனுசரித்து நாட்டின் பொது அமைதியையும் முன்னேற்றத்தையும் மனதில் கொண்டு அளிக்கப்பட்ட தீர்ப்பு என்று கூட சிலர் கருதலாம். இந்துக்களுக்கு வழங்கப்பட்ட இடத்தில் அவர்கள் கோவில் கட்டினால், முஸ்லீம்களுக்கு வழங்கப்பட்ட இடத்தில் அவர்கள் மசூதி கட்டினால் பொது அமைதியும் முன்னேற்றமும் பாதுகாக்கப்படும் என கருதுகிறார்களா? ஒரு இடம் யாருக்குச் சொந்தம் எனும் பிரச்சனையில் நியாயமான தீர்ப்பளித்தால் நாட்டின் அமைதி கெடும் என்றால் நாட்டில் அரசின் பணி என்ன? காஷ்மீரில், வட கிழக்கு மாநிலங்களில் தங்களுக்கு உரிமைகள் வேண்டும் சுதந்திரம் வேண்டும் என போராடும் மக்களை அமைதியை கெடுப்பதாக, நாட்டை துண்டாட நினைப்பதாக கூறித்தானே ராணுவத்தி நிறுத்தி நசுக்கி வருகிறது அரசு. என்றால் பொது அமைதி என்பதன் பொருள் என்ன? மக்களுக்கு விரோதமானதாக இருந்தாலும் அரசை எதிர்க்கக்கூடாது என்பது தான் பொது அமைதியா?

இந்தத்தீர்ப்பின் மூலம் இரண்டு சாதகமான அம்சங்களை இந்துப்பாசிசங்கள் பெற்றிருக்கின்றன. ஒன்று, புராணக் குப்பைகளை அடிப்படையாக வைத்து சேதுக்கால்வாய் பணிகளுக்கு தடைவிதிக்கவைத்த பார்பனீயம் பரப்பிவரும், வரலாற்றில் இருந்திராத கற்பனைப் பாத்திரமான ராமனுக்கு, இந்த இடத்தில் தான் அவன் பிறந்தான் என்று சட்டபூர்வ அங்கீகாரம் பெற்றிருப்பது. இரண்டு கோவில் கட்டுவதற்கு அனுமதி பெற்றிருப்பதன் மூலம், ஏற்கனவே இந்து வானரங்கள் காசி, மதுரா என கொக்கரித்து வரும் நிலையில் தீர்ப்புக்கு எதிர்வினையாக முஸ்லீம்கள் மத அடிப்படையில் ஒன்றிணைவது அதிகரிக்கும். இதன் மூலம் ஒடுக்கப்பட்டவர்கள் பிற மதத்தினருடன் கலந்து பழகும் நிலை தவிர்க்கப்பட்டு, அவர்கள் இந்து எனும் அடைமொழிக்குள்ளே அடைபட்டுக்கிடக்கும் வாய்ப்பை அதிகரிக்கும்.

ஆயிரத்துச் சொச்சம் சதுர அடி நிலம் கிடைத்திருக்கிறது என்பதல்ல இந்தத்தீர்ப்பு. அதிகாரவர்க்கத்திலும் அரசு எந்திரத்திலும் பார்ப்பனப் பாசிசங்களின் மேலாதிக்கம் மீண்டும் ஒருமுறை நிரூபணப்பட்டிருக்கிறது. உழைக்கும் மக்களாய் முஸ்லீம்களும், கிருஸ்தவர்களும், ஒடுக்கப்பட்டவர்களும் ஒருங்கிணைந்து எதிர்ப்புப்போர் நடத்தாதவரை இந்தப்பாசிசங்களை வீழ்த்தமுடியாது என்பதுதான் இத்தீர்ப்பின் அடிநாதமாய் ஒலிக்கிறது.

-நன்றி செங்கொடியின் சிறகுகள்

gravatar

நியூயார்க் வர்த்தக வளாகம் விமானங்களால் தாக்கப்பட்டது என்பது பொய்யான தகவல் & ஆய்வு அறிவிப்பு


நியூயார்க் வர்த்தக வளாகம் விமானங்களால் தாக்கப்பட்டது என்பது பொய்யான தகவல் என புதிய ஆய்வறிக்கை கூறுகிறது.

அமெரிக்காவில் உலகவர்த்தக மையம் தகர்க்கப்பட்ட ஒன்பதாவது ஆண்டு கடந்து விட்ட நிலையில் வேளையில் ஆர்கிடெக்ட்ஸ் அண்ட் என்ஜினீயர்ஸ் ஃபார் 9/11 ட்ரூத். உலக வர்த்தக வளாக தகர்ப்பு குறித்து உண்மைகளை வெளிவர பாடுபடும் அமைப்பின் கட்டிட வடிவமைப்பாளர்கள் மற்றும் பொறியாளர்கள் மேற்கொண்ட ஆய்வு உலக வர்த்தக மையம் தகர்க்கப்பட்டது மோதிய விமானங்களால் அல்ல குண்டுவெடிப்பின் மூலம்தான் என தனது அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது.

2001 ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி அன்று நடந்த தாக்கு தலில் 3 ஆயிரம் பேர் பலியாயினர். இச்சம்பவம் தொடர்பாக வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வஅறிக்கைகள் தவறு என்பதற்கான உறுதியான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக அவ்வமைப்பின் தலைவர் ரிச்சார்ட் காஜ் தெரிவித்திருக்கிறார்.

கட்டிடங்களின் மீது விமானங் கள் மோதவில்லை எனவும், அக் கட்டிடங்களில் நடந்த குண்டு வெடிப்பினால்தான் உலக வர்த்தக மையம் தகர்ந்தது என காஜ் கூறுகிறார்.

உலக வர்த்தக மையம் உரு வாக்கப்பிருந்த இடத்திலிருந்து உரு கிய நிலையிலான உலோகச் சித றல்கள் கிடைத்துள்ளன. விமான எரிபொருள் இரும்பையோ அல்லது ஸ்டீலையோ உருக்கும் சக்தி பெற்றவையல்ல.. ஆத லால் கட்டிடத்தின் உள் பகுதியிலிருந்து இருந்த (!) பொருள்தான் கட்டிடம் தகர்வதற்கு காரணமாகயிருக்கும்-அறிக்கை கூறுகிறது.

விமானம் மோதாமலேயே 6.5 வினாடிகளில் கட்டிடங்கள் தகர்ந்தது எப்படி? என்பதுக் குறித்து முறையான விசாரணை நடத்தவேண்டும் என 600 கட்டிட வடிவமைப்பாளர்கள் மற்றும் பொறியாளர்கள் அடங்கிய அவ் வமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

உலக வர்த்தக மையம் தகர்க்கப்பட்ட இடத்திலிருந்து கிடைத்த உலோக சிதறல்களில் நானோ தெர்மிட்டிக் ஒருங் கிணைப்பின் சிதறல்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதுவே உலக வர்த்தக வளாக கட்டிடத்தில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளதற்கு ஆதாரம் எனவும் அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.

-சர்ஜுன் source www.tmmk.in

gravatar

உலகமக்களின் கடும் எதிர்ப்பின் எதிரொலி - புனித திருக்குர்ஆன் பிரதியை எரிக்கப் போவதாக அறிவித்த வெறியன் டெர்ரி ஜோன்ஸ் கைவிட்டான்

அமெரிக்காவின் ஃப்ளோரிடா சர்ச்சின் பாஸ்டர் டெர்ரி ஜோன்ஸ் தற்பொழுது அதனை கைவிட்டு விட்டதாக அறிவித்துள்ளான்.

கிரவுண்ட் ஸீரோவுக்கு அருகில் மஸ்ஜித் நிர்மாணிக்காமலிருந்தால் தாங்கள் ஒருபோதும் திருக்குர்ஆன் பிரதியை எரிக்கமாட்டோம்எனவும் அவன் தெரிவித்துள்ளான்.

டெர்ரி ஜோண்ஸ் கிரவுண்ட் ஸீரோவில் இஸ்லாமிய மையம் நிறுவ ஏற்பாடு செய்துவரும் இமாம் ஃபைஸல் அப்துற்றவூஃப் பள்ளிவாசல் கட்டும் முயற்சியை வேறு இடத்திற்கு மாற்ற ஒப்புக் கொண்டுள்ளதாக கூறியதை அடுத்து தான் இந்த செயலில் இருந்து பின்வாங்கியதாக அவன் சப்பைக்கட்டு கட்டியுள்ளான். ஆனால் அது தவறான தகவல் என இஸ்லாமிய மையம் அறிவித்துள்ளது.

சமாதானத்தை லட்சியமாகக் கொண்ட எவருடனும் பேச்சு வார்த்தை நடத்த தயார் என நியூயார்க் இமாம் அப்துற்றவூஃப் உறுதிபடக் கூறியுள்ளார்.


திருக்குர்ஆன் பிரதியை எரிக்கும் விபரீதத்தை விளைவிக்கக்கூடாது என அமெரிக்க உளவுத்துறையான எஃப்.பி.ஐ.யும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராபர்ட் கேட்ஸும் செம்மையாக கண்டித்ததைத் தொடர்ந்து தான் நையபுடைக்கப்படுவதில் இருந்து தப்புவதற்காகவே அந்த பைத்தியம் தனது விபரீதத்தை செய்ய வில்லை என கூறப்படுகிறது.

இந்த பைத்தியக்கார னின் முயற்சி உலகெங் கும் ஆக்கிரமிப்பு செய்து கொண்டிருக்கும் அமெரிக்க இராணுவத் தினரின் உயிருக்கு கடுமை யான அச்சுறுத்தலாக அமையும் என ஆப்கானில் நிலை கொண்டிருக்கும் நேட்டோ படைகளுக்கு தலைமை தாங்கும் அமெ ரிக்க படை தளபதி பெட்ராஸ் தெரி வித்தார். ஆப்கானிஸ்தானில் நிலை கொண்டிருக்கும் ஒரு லட்சத்து இருபதினாயிரம் துருப்புக்களுக்கும் நேரிடையான ஆபத்தை விளை விக்கக் கூடியது என்று அவர் கூறியிருந்தார். அரசு இதில் நேரடியாக தலையிட்டது. ஆனால் தனது அரசு இவ்விவகாரத்தில் தலையிட்டதாக வெளியான செய்தியை ஒபாமா மறுத்துள்ளார்.

அமெரிக்காவில் எல்லா மதப்பிரி வினருக்கும் சம உரிமை உண்டு என வும் மஸ்ஜித் கட்டுவதை எதிர்க்க வில்லை எனக்கூறிய ஒபாமா, கிரவுண்ட் ஸீரோவுக்கருகில் யூத தேவாலயமும், ஹிந்துக்கோயிலும் கட்டலாமென்றால் மஸ்ஜிதும் கட்டலாம் எனத் தெரிவித்தார்.

“நாங்கள் முஸ்லிம்களுக்கு எதிரி களல்ல மாறாக பயங்கரவாதத்திற்கு எதிரானவர்கள்” என ஒபாமா செப்.11 நினைவுத்தின நிகழ்ச்சியில் கலந்துக் கொள்வதற்கு முன்னர் வெள்ளை மாளிகையில் வைத்து நடத்திய பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

மஸ்ஜித் கட்டுவதை ஆதரித்து நியூயார்க் நகரில் ஆயிரக்கணக் கானோர் பங்கேற்ற போராட்டம் நடைபெற்றது.

திருக்குர்ஆன் பிரதியை எரிக்கும் திட்டத்திற்கு எதிராக உலகம் முழு வதும் கடந்த வெள்ளிக்கிழமை கடும் எதிர்ப்பு கிளம்பியிருந்தது.

வெறியன் டெர்ரி ஜோன்ஸ்&ன் இந்த அறிவிப்பை மத்திய உள் துறை அமைச்சர் ப. சிதம்பரம் கடுமையாகக் கண்டித்துள்ளார். இதனால் தேவையற்ற பதற்றமும் பகைமை உணர்வும் அதிகரிக்கும் என்று அவர் எச்சரித்தார். அதே நேரத்தில் இந்தியாவில் இந்தப் பிரச்னையை பத்திரிகைகள் கட்டுப் பாட்டுடன் கையாள வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். மத உணர்வுகளைக் காயப்படுத்தும் இந்தச் செயலை அமெரிக்க அதிகாரிகள் தடுத்து நிறுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். இந்த நாகரிகமற்ற செயலைத் தடுத்து நிறுத்த அமெரிக்க அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுக்கும் அதேநேரத்தில், அதுபோன்ற சம்பவங்கள் நடந்தால் இந்திய பத்திரி கைகளும், தொலைக் காட்சிகளும் அவற்றை வெளியிடுவதில் கட்டுப் பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும். மதங்களிடையே நல்லிணக்கம் நிலவ வேண்டும் என்று விரும்பும் யாரும் இந்தச் செயலை கண்டிப்பார்கள் என் றார் அவர்.

அமெரிக்கர்கள் எதிர்ப்பு:

குரான் எரிப்பு அறிவிப் புக்கு பெரும்பாலான அமெரிக்கர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

குரான் எரிப்பு முடிவைக் கைவிடுமாறு அலாஸ்கா மாநில முன்னாள் ஆளுநரும் குடியரசுக் கட்சித் தலைவருமான சாரா பாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுபோன்ற செயல்கள் எரியும் நெருப்பில் எண்ணெய் வார்ப்பது போலாகிவிடும். தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்தும். இது அமெரிக்க மரபுக்கு முரணானது என்றார் அவர். சகிப்புத்தன்மை, கருணை, நீதி, சமத்துவம் போன்ற உயர்ந்த எண்ணங்களைப் போதிக் கிறது கிறிஸ்துவம். எனவே இந்த முடிவை கைவிட வேண்டும் என்று அவர் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மத போதகர் டெர்ரியின் செயல் களுக்கும் அமெரிக்கர்களுக்கும், அமெரிக்க அரசுக்கும், அமெரிக்க மதங்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் கூறியுள்ளார். இது போன்ற அமெரிக்காவின் பல்வேறு தலைவர்கள் வெறியன் டெர்ரின் அறிவிப்பைக் கண்டித்தனர்.

gravatar

தீவிரவாதத்தை ஏற்றுமதி செய்யும் அமெரிக்கா! பகீர் தகவல்


வாஷிங்டன்:அமெரிக்க ராணுவத்தின் ரகசியங்களை அவ்வப்போது வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது விக்கிலீக் வெப்சைட். இதற்கு அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் கண்டனம் தெரிவித்தது.

இந்நிலையில் விக்கிலீக் வெப்சைட்டின் சர்வர்களுக்கு சட்டரீதியான பாதுகாப்பு பெறுவதற்காக விக்கிலீக் தலைவர் ஜூலியன் அசாஞ்ச் ஸ்வீடனில் தங்கியிருந்தார். அவருக்கு திடீரென பாலியல் குற்றச்சாட்டுகளின் பேரில் கைது உத்தரவு பிறப்பித்து மிரட்டல் விடுக்கப்பட்டது. இதன் பின்னணியில் அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகன் இருக்கலாம் என ஜூலியன் அசாஞ்ச் கருத்து தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் மீண்டும் அமெரிக்க உளவு நிறுவனம் சி.ஐ.ஏ. அமைப்பின் ஆய்வறிக்கை ஒன்றை, விக்கிலீக் தனது இணையதளத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் தீவிரவாத தாக்குதல் நடவடிக்கைக்கு, அமெரிக்க மக்களை தீவிரவாதிகள் தேர்வு செய்வது பற்றி விளக்கப்பட்டுள்ளது. ஹெட்லி போன்ற அமெரிக்க குடியுரிமை பெற்றவர்கள், இந்தியாவில் பல இடங்களில் உளவு பார்த்து மும்பை தாக்குதலுக்கு சதிதிட்டம் தீட்டியது அமெரிக்காவை அதிர்ச்சியடையச் செய்தது.

வெளிநாட்டில் நடைபெறும் தீவிரவாத தாக்குதல்களுக்கு அமெரிக்காவில்தான் சதிதிட்டம் தீட்டப்படுகிறதா, என்றும் தீவிரவாதத்தை ஏற்றுமதி செய்யும் நாடாக அமெரிக்காவை, வெளிநாட்டினர் பார்க்கின்றனரா? என்ற தலைப்பில் சி.ஐ.ஏ. தயாரித்த ஆய்வறிக்கை யை விக்கிலீக் தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இதில் அமெரிக்க ராணுவ ரகசியங்கள் வெளியிடப்படவில்லை என்றாலும், உளவுத்துறை தயாரித்த அறிக்கையை எப்படியோ பெற்று வீக்கிலீக் வெளியிட்டிருப்பது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

gravatar

மதானி கைது வெளிவராத தகவல்கள்


தந்தையை ஆரத் தழுவி வழி அனுப்புகிறர் மகன்.

கேரள மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவரும் மார்க்க அறிஞருமான அப்துன் நாசர் மதானி இன்று 17.08.2010 பகல் 1.30 மணியளவில் கைது செய்யப்பட்டார்.

2008ஆம் ஆண்டு பெங்களூருவில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் மதானி மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. பெங்களூரு குண்டுவெடிப்பில் பிடிபட்டதாகக் கூறப்படும் கேரள மாநிலத்தைச் சேர்ந்த நஸீர் என்பவர் மதானியின் பெயரைக் கூறினாராம். நஸீர் அளித்த வாக்குமூலத்தின்படி 31வது குற் றவாளியாக சேர்த்திருப்பதாக காவல்துறை அறிவித்திருக்கிறது.

கர்நாடக மாநில குடகு மாவட்டத் தில் லகாரி எஸ்டேட்டில் சதித் திட்டம் தீட்டியதாகவும் குற்றம் சாட்டி பாஜக ஆளும் கர்நாடக மாநில காவல்துறையினர் மதானியின் வசிப்பிடமான கொல்லம் நோக்கி வந்தனர். மதானியின் அரும்பெரும் முயற்சியால் உருவாக் கப்பட்ட அன்வராசேரி மதரஸா கல்விக்கூடத்தில் “மதானியின் ஆதரவாளர்கள் மதானியை கைது செய்ய விடமாட்டோம்“ என உணர்ச்சிகர முழக்கமிட்டு மதானியை அரணாக காவல் காத்து நின்றனர்.

மதானியைக் கைது செய்ய முடியாமல் கர்நாடக காவல்துறை கையைப் பிசைந்து நிற்கிறது. கேரள அரசிடம் இருந்து முறை யான அறிவிப்போ அனுமதியோ பெறாமல் கர்நாடக காவல் துறையினர் கேரளாவில் நுழைந் துள்ளதாக கேரள உள்துறை அமைச்சர் கொடியேறி பாலகிருஷ்ணன் தெரிவித்தார். இருப் பினும் மதானியைக் கைது செய்ய கர்நாடக காவல்துறைக்கு கேரள காவல்துறை தேவையான ஒத்துழைப்பினை வழங்கும் என்றும் கேரள உள்துறை அமைச்சர் தெரிவித்தார். இதனிடையே மதானியின் இருப்பிடம் நோக்கிச் சென்று அவரைக் கைது செய்ய முடியாமல் கர்நாடக காவல்துறையினர் தவித்தனர்.

இதைப்போன்றுதான் 12 ஆண்டுகளுக்கு முன்பு கோவை குண்டுவெடிப்பு தொடர்பாக மதானியைக் கைது செய்ய தமிழகக் காவல்துறையினர் வந்த போது மதானியைக் கைது செய்ய விடமாட்டோம் என அவர் மீது பாசம் கொண்ட மக்கள் ஆவேசமாக எதிர்த்தனர். சட்டத்துக்கு உரிய மரியாதையை நாம் வழங்க வேண்டும். நீதித்துறையை, காவல்துறையை நாம் என்றுமே அவமதிக்கும் விதத்தில் நடந்து கொள்ளக் கூடாது என தனது ஆதரவாளர்களை ஆறுதல் படுத் திவிட்டு தமிழகக் காவல் துறை யினருடன் கோவைக்கு பயணமானார்.

என் மீது போடப்பட்ட வழக்குகள், என் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச் சாட்டுக்கள் அனைத்தும் பொய் என நிரூபித்து குற்றமற்றவனாக வருவேன் கலங்க வேண்டாம் என சென்ற மவ்லவி அப்துன் நாசர் மதானி நிரபராதியாக, குற்றமற்றவராக அவர் தனது அன்புக்குரியவர்களிடம் வாக்களித்தது போலவே வெளியே வந்தார்.

என்ன கொடுமை? அவர் சிறையில் அடைக்கப்பட்டு குற்றமற்றவராக நிரூபிக்கப்பட்டு வெளியே வர ஒன்பது ஆண்டுகள் ஆகிவிட்டன. 33 வயதில் சிறை சென்றவர் 42 வயதில் சிறை மீண்டார். பல்வேறு நோய்கள் என்ற கூடுதல் போனஸுடன் அவர் விடுதலையானார்.

விடுதலையாகி முழுக்க மூன்று ஆண்டுகளைக் கூட அவர் தம் குடும்பத்தினருடன், ஆதரவாளர் களுடன் மகிழ்ச்சியுடன் கழிக்கவில்லை. அதற்குள் மீண்டும் ஒரு சிறைவாசம் அவரை இருட்டில் தள்ளத் தயாராகிறது.

மதானியை வளைத்துப் பிடிக்க கேரளா வந்த கர்நாடக காவல்துறையினர் 13, 14ஆம் தேதிகளில் கேரளா சுற்றுப்பயணம் செய்த இந்தியக் குடியரசுத் தலைவர் தனது பயணத்தை முடித்த பின் கைது நடவடிக்கையை மேற்கொள்ளலாம் என காத்திருந்ததாக தகவல்கள் வெளி வந்தன.

எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்ற நிலையில் இருந்த மதானி மீதான வழக்கு விவரம் அவர் மீதான அனுதாப அலை கேரள மாநில முஸ்லிம்களிடம் மட்டுமின்றி அனைத்து ஒடுக்கப்பட்ட மற்றும் அனைத்து சமூகங்களிலும் உள்ள நடுநிலையாளர்களின் மத்தியில் வீசுவதாக ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.

யாரையாவது பிடிப்பது, பின்னர் அவர்மூலம் யாரை சிக்கவைப்பது என ஆலோசிப்பது குறிப்பாக தங்களது வெறுப்புப் பட்டியலில் இருக்கும் ஒருவரை சதியில் சிக்கவைப்பது என திட்டமிடும் தீய சக்திகள் மதானியின் விஷயத்தில் விளையாடி இருக்கக்கூடும் என கோழிக்கோட்டைச் சேர்ந்த சமூகநல ஆர்வலர் தங்கச்சன் குறிப்பிடுகிறார்.

மதானியின் பெயரைக் குறிப்பிடு என உடல்ரீதியாகத் துன்புறுத்தி வாக்குமூலம் வாங்கியிருந்தாலும் வியப்படைய ஒன்றுமில்லை என பெயர் குறிப்பிட விரும்பாத ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப் பின் முக்கியப் பிரமுகர் ஒருவர் குறிப்பிட்டார்.

இந்நிலையில் மதானி மீதான குற்றச்சாட்டுக்கு மதானியின் பதில் என்ன என்பதை கேரள ஊடகங்கள் உள்பட எந்த வெகுஜன ஊடகங்களும் கண்டுகொள்ளவே இல்லை என கண்டனம் தெரிவிக் கின்றனர் கேரள மக்கள் ஜனநாயகக் கட்சியினர்.

பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கில் மதானிக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட சதி வழக்கில் மத்திய குற்றவியல் பிரிவு தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையும் ரத்து செய்யப்பட வேண்டும் என்பதே நாசர் மதானி தரப்பினரின் வாத மாகும்.

குற்றவியல் சட்டத்தின் பிரிவு 482ன்படி மவ்லவி அப்துன் நாசர் மதானிக்கு எதிராக எவ்வித ஆதாரங்களும் இல்லாமல் குற்றப் பத்திரிக்கை தயார் செய்யப்பட்டுள்ளதாகவும், நம்ப முடியாத, நடைபெறவே சாத்தியம் இல்லாத ஒரு சதித்திட்டத்தை தீட்டியதாகக் குற்றம்சாட்டி ஒரு பொய்வழக்கை குற்றவியல் பிரிவு பதிவு செய்துள்ளது என மதானியின் வழக்கறிஞர் உஸ்மான் தெரிவிக்கிறார்.

கர்நாடக மாநிலத்தில் உள்ள குடகு மாவட்டத்தில் உள்ள லகாரி எஸ்டேட்டில் மதானி ரகசிய திட்டம் தீட்டியதாக கர்நாடக காவல்துறை குற்றம்சாட்டிய விவகாரத்தில் மதானியின் பங்கு என்ன என்பது குறித்து உண்மை நிலையைக் கண்டறிய கேரள காவல்துறையினரையும் ஒருதரப் பாக சேர்க்க வேண்டும் என மதானியின் சட்ட ஆலோசகர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

2007ஆம் ஆண்டு கோவை யிலிருந்து மதானி விடுதலையான பிறகு மதானி எங்கெல்லாம் சென்றார் என்பது கேரள காவல் துறைக்குத் தெரியும். எனவே அதுகுறித்த விவரங்களை கேரள காவல்துறை சேகரிக்க வேண்டும்.

மூன்று ஆண்டுகளாக மதானிக்கு கேரள அரசு விசேஷ பாதுகாப்பை வழங்கியுள்ளது. மதானிக்கு கேரள அரசு வழங்கியுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கர்நாடக நீதிமன்றத்துக்கு புரியவைப்பதற் காக கேரள அரசையும் ஒரு கட்சியாக சேர்க்க வேண்டும் என மதானி தரப்பில் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொட ரப்பட்டுள்ளது.

மத்திய அரசின் சட்டவிரோத செயல்பாட்டு தடைச் சட்டத்தி ன்படி ஒருவருக்கு எதிராக வழக் குத் தொடரும் முன்னர் அந்த மனிதருக்கு எதிராக ஆதாரங்கள் உண்டா என தொடர்புடைய அதிகாரி தீவிரமாகப் புலனாய்வு செய்து அரசுக்கு பரிந்துரை செய்திருக்க வேண்டும். ஆனால் மதானியின் விஷயத்தில் இந்த நெறிமுறைகள் அனைத்தும் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளதாக குமுறுகிறார்கள் மதானியின் ஆதரவாளர்கள்.

மதானியை கைது செய்வதை தாமதப்படுத்துமாறும், ரமலான் மாதம் முடிந்த பிறகு மதானி கைது நடவடிக்கையை வைத்துக்கொள்ள வேண்டும் என கேரள மாநில அனைத்து முஸ்லிம் தலைவர்களும் முதலமைச்சர் அச்சுதானந்தனை சந்தித்து வேண்டுகோள் விடுத்துனர். அதற்கு அச்சுதானந்தன், ‘‘சட்டம் தன் கடமையைச் செய்யும்’’ என பதில் கூறினார்

gravatar

ரத்தின சபாபதியை பணி நீக்கம் செய்ய வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம், சென்னையில் தலைமைச் செயலகத்தை நோக்கி பேரணி





கடையநல்லூர் : வெடிகுண்டு நாடகம் நடத்திய கோயம்புத்தூர் உளவுத்துறை அதிகாரி ரத்னசபாபதியை உடனடியாக டிஸ்மிஸ் செய்ய வலியுறுத்தி தடையை மீறி ஆர்பாட்டம் நடத்த முயன்ற ஐம்பதுக்கும் மேற்பட்ட பாப்புலர் பிரண்ட் தொண்டர்கள் கைது செய்யப்பட்டு இ பி கோ பிரிவுகள் 141,188, போன்ற இதர பிரிவிகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
ஏற்கெனவே இரத்தினசபாபதி யை டிஸ்மிஸ் செய்ய வலியுறுத்தி 2008 March 1 நடந்த ஆர்பாட்டத்தில் தடியடி நடத்தப்பட்டது
எனவே July 22,2010 நேற்றைய முன்தினம் அசம்பாவிதங்கள் நடைபெற்றுவிடாமல் தவிர்க்க அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டிருந்ததால் காலை 8 மணியிலிருந்தே கடையநல்லூரில் பரபரப்பு தொற்றிக்கொண்டது.
வேலியே பயிரை மேய்ந்த கதை போல சட்டத்தை மதிக்க வேண்டிய காவல் துறை அதிகாரிகள் முஸ்லிம் இளைஞர்களுக்கு எதிராக சதித் திட்டம் செய்ததால் தடையை மீறி ஜனநாயக முறையில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவெடுத்தது பாப்புலர் பிரண்ட்.
சரியாக ஐந்தரை மணிக்கு குறித்த நேரத்தில் பாப்புலர் பிரண்ட் தலைவர் உட்பட நிர்வாகிகள் அனைவரும் ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக திட்டமிடப்பட்டிருந்த கடையநல்லூர் மணிக்கூண்டு அருகில் சென்ற பொது காவல் துறையினரால் தடுக்கப்பட்டு கைது செய்ய முற்பட்டனர் .
பாப்புலர் பிரண்ட் தலைவர் அவர்கள் ஜனநாயக முறையில் கருத்துக்களை தெரிவிக்க தங்களுக்கு உரிமையுண்டு என எவ்வளவோ பேசிப் பார்த்தும் அதிகாரிகள் கேட்காமல் சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு அருகிலுள்ள வெள்ளாள செட்டியார் மண்டபத்தில் நீண்ட நேரம் தங்க வைக்கப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

gravatar

ஷஹீத் பழனிபாபா அவர்கள் 1994-ம் ஆண்டு உங்கள் தூதுவன் இதழுக்கு அளித்த பேட்டி


கேள்வி - உங்கள் அமைப்பு பற்றி கூறுங்கள்?

பழனிபாபா - அகில இந்திய ஜிஹாத் கமிட்டிதான் எங்கள் அமைப்பு. இந்து மதவெறி அமைப்பான ஆர்.எஸ்.எஸ். அமைப்பிடமிருந்து முஸ்லிம்களை காப்பது எங்களது முதல்வேலை. ஆர்.எஸ்.எஸ் தங்களது செயல்பாடுகளை நிறுத்திக்கொண்டால் எங்களது நடவடிக்கைகளுக்கு அவசியம் வராது!

கேள்வி - அப்படி என்றால் சமுதாய நலன் என்பதெல்லாம்...?

பழனிபாபா - சமுதாய நலன்களுக்கு பாடுபட எத்தனையோ அமைப்புகள் உள்ளது. இப்போது இந்தியாவில் சமுதாயத்திற்கு தேவை, சமுதாய நலன் அல்ல, சமுதாயத்தின் தற்காப்பு! அதற்கான ஏற்பாடுகளை நாங்கள் செய்தாக வேண்டும். 6.12.1992-ல் இருந்து 12.3.1993 வரை 13,853 (கப்ரூ) குழிகள் தோண்டியெடுக்கப் பட்டுள்ளது!

இது அமைச்சர்களால், பாராளுமன்றத்தில் தரப்பட்டுள்ள புள்ளிவிபரம் இவ்வளவு பேரும் கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்கள்! கலவரங்களுக்குக் காரணம் இந்து முன்னணி போன்ற அமைப்புகள்தான். முஸ்லிம்களில் ஒரு பகுதியினர் கோழையாக இருப்பதால்தான், அவர்கள் திரும்பத் திரும்ப முஸ்லிம்களை அடித்துக் கொண்டிருக்கிறார்கள்!

ஆர்.எஸ்.எஸ் அலுவலகம் வெடித்ததற்குப் பின்னால், அவர்களின் செயல்பாடுகள் குறைந்து விட்டது. முஸ்லிம்கள் திருப்பி அடிப்பார்கள் என்ற பயம் இருந்தால், எல்லோரும் அமைதியாக இருந்து விடுவார்கள்! எனவே தான் எனக்கு முஸ்லிம்களின் மிதவாதத்தில் நம்பிக்கையில்லை. ஒரு முஸ்லிம் தனியாக,உறுதியான மனநிலையுடன் நின்றான் என்றால், எங்கு வேண்டுமானாலும் தனித்து வாழலாம்! மைனாரிட்டி, மெஜாரிட்டி இங்கு பிரச்சினையில்லை, கெளரவம் (Mighty) தான் பிரச்சினை. அதனை செயல்படுத்த தவறிவிட்டார்கள் அரசியல்வாதிகள்!

அரசியல் அமைப்புகளும், நம் முன்னோர்களும், மிதவாதம் பேசியவர்களும்கூட தங்கள் சுயநலத்திற்காகத்தான் பேசினார்கள்! (கடந்த சில வருடங்களாக) ஜெயலலிதா ஆட்சியில் மதக் கலவரத்தால் பாதிக்கப்பட்டு இறந்து போன முஸ்லிம்கள் முப்பத்தி இரண்டு பேர். முஸ்லிம்கள் அதற்கு என்ன நடவடிக்கை எடுத்தார்கள்?

ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் இன்று பயந்து கொண்டிருக்கிறார்கள் என்றால், அது முஸ்லிம் அரசியல் அமைப்புகளைக் கண்டோ, சமூக சேவை, ஒழுக்க நெறிகளைக் கண்டோ இல்லை! நான் பதிலடி தருவேன் என்பதனால் பயப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

முஸ்லிம்கள் தங்கள் அரசியல் கட்சிகளுக்குக் கொடுத்த் ஆதரவில் பத்து சதவீதம் எனக்கு கொடுத்திருந்தால், இங்கே மதக்கலவரமே இல்லாமல் செய்திருப்பேன்! நாங்கள் இந்த அமைப்பை செயல் படுத்துவதால்தான் முஸ்லிம்கள் மானத்தோடு நடக்கவாவது முடிகிறது. எல்லா முஸ்லிம்களும் குறை சொல்லிக் கொண்டுதான் இருப்பார்கள். ஆனால், என்னால்தான் கலவரம் வந்தது என்று ஆதாரப்பூர்வமாய் நிருபிக்க மாட்டார்கள். நிரூபிக்கவும் முடியாது.

கேள்வி - நீங்கள் பேசுகின்ற பேச்சின் மூலம் கலவரம் ஏற்படாது என்கிறீர்களா?

பழனிபாபா - நான் பேசுகின்ற பேச்சின் மூலம் கலவரம் ஏற்படவில்லை என்று ஒரு முறையல்ல,
123-முறை உயர்நீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது! நிருபித்தால் பத்து இலட்சம் ரூபாய் தருவதாக அறிவித்து இரண்டு வருஷமாச்சு.

கேள்வி - கலவரம் ஏற்படவில்லை என்ற கோர்ட்டின் தீர்ப்புகள் உங்களது வாதத்திறமையால் இருக்கலாமா?

பழனிபாபா - எனக்கு வருகின்ற ஜனக்கட்டுபாடு (கூட்டம்) முஸ்லிம் லீக்காரர்களுக்கு இல்லாததாலும், என்னை அவர்கள் ஏற்றுக் கொள்ளாததாலும் ஏற்படுகின்ற பொறாமையாலும், அவர்கள் இப்படிச் சொல்லலாமே தவிர, அரசாங்கமும், கோர்ட்டும் அதைச் சொன்னது கிடையாது! குற்றப்பத்திரிக்கைகளில் (குற்றம்செய்ததாக) என்னைக் கைது செய்தது கிடையாது. மதக்கலவரத்தைக் காரணம் காட்டி என்னைக் கைது செய்ததே கிடையாது. பத்திரிக்கையில்தான் அப்படியொரு செய்திவரும்!

இப்போதுகூட (பத்து மாதம்) ஜெயிலில் இருந்தேனே. காரணம் தெரியுமா உங்களுக்கு? ஆர்.எஸ்.எஸ். அலுவலக குண்டு வெடிப்புக்கு நான் காரணம் என்ற பத்திரிக்கைச் செய்தியால்தான். முஸ்லிம்களாகிய நீங்கள் தவறாக நம்பிக் கொண்டிருக்கிறீர்கள். மேலும் என்னிடம் அதுபோன்று ஏதாவது இருக்கிறதா? பத்திரிக்கைகள்தான் என்மீது அவதூறாக எழுதுகின்றன.

கேள்வி - நீங்கள் கோயில்களை இடிப்போம் என்றெல்லாம் பேசுவதில்லையா? பேசாதபோது அவதூறு எழுதும் பத்திரிக்கைகள் மீது வழக்குதொடர வேண்டியதுதானே?

பழனிபாபா - கோயில்களை இடிப்பேன் என்று நான் பேசியதற்கு ஆதாரம் காட்டுங்கள். நான் சொன்ன ஒரே வாசகம். பாபர் மசூதி இருந்த இடத்தில் இராமர் கோயில் கட்டினால், வெடிகுண்டு வைத்து தகர்த்தெறிவோம் என்பதுதான். இதை நான் கோர்ட்டிலேயே எழுதி கொடுத்திருக்கிறேன். அதைப்பற்றி கவலைப்பட வேண்டியது உத்திரப்பிரதேச அரசு. மத்திய அரசோ, தமிழ்நாடு அரசோ அல்ல!

பாபர்மசூதி இருந்த இடத்தில் இராமர் கோவில் கட்டினால், நானோ அல்லது என்னுடைய ஆள்களோ வெடிகுண்டு வைத்து தகர்த்துவிடுவோம். அதற்காக தூக்குக்கயிறு கிடைத்தாலும் சரி, தமிழ் நாட்டிலுள்ள பத்திரிக்கைகள், முஸ்லிம் விஷயத்தில் நியாயமான போக்கை கடைபிடிக்கின்றனவா? முஸ்லிம்கள் அனைவருக்கும் தெரியும். தமிழக பத்திரிக்கைகள் பொய் பேசுகின்றன என்று! என் விஷயத்தில் மட்டும் ஏன் பத்திரிக்கை செய்திகளை ஏற்றுக் கொள்கிறார்கள் என்றால், என்மீது அவர்களுக்கு இருக்கும் வெறுப்பே காரணம். நான் பேசிய அனைத்து கூட்டங்களிலும் மாற்று மதத்தவர்கள் இல்லாமல் இருந்தது கிடையாது!

ஒன்று வன்னியர் சங்கம், அடுத்து பாட்டாளி மக்கள் கட்சி, அதற்கு முன்னால் தி.மு.க.காரர்கள் போட்டிருப்பார்கள். அந்த கூட்டங்களில்தான் நான் பேசி இருப்பேன். நாங்கள் எங்கு கூட்டம் போடுவோம் என்றால், எங்கே ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் கூட்டம் போட்டார்களோ அங்குதான். அதே மாதத்தில் கூட்டம் போடுவோம். முஸ்லிம்கள் தவறாக உணர்த்தப்பட்ட பொய் வதந்திகளைத் தூக்கி கொண்டு வருவதுதான் காரணம். நாகூர் கலவரத்தின் பின்னணி உங்களுக்குத் தெரியுமா? நான் நாகூரில், 1980-ல் பேசியதுதான். அதற்கு பின்னால் பேசியதே கிடையாது!

கேள்வி - அப்படியானால் வன்முறையை நீங்கள் தூண்டிவிடுவதில்லையா?

பழனிபாபா - வன்முறை வந்தால் தடுக்கத்தான் நாங்கள் இருக்கிறோமே தவிர, நாங்களாக வலியப்போய் அமைதியைக் கெடுத்ததில்லை. போலீஸூம் குற்றம் சாட்ட்வில்லை. பாபா கைது செய்யபட்டார் என்று பத்திரிக்கைகளில் செய்திவரும். ஆனால் என்னைக் கைது செய்யும்விதமே வேறு.

ஒவ்வொரு ஊரிலும் நான் கோயிலை இடிக்கப்போவதாக சொல்லி என்னை கைது பண்ணியுள்ளார்கள் சரி. பாபர்மசூதி இடித்தவுடன் என்னை கைது செய்தார்களே? அப்போது நான் எந்தக் கலவரத்தைத் தூண்டினேன்? மசூதி இடிப்பிற்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? நீ கலவரம் செய்யக்கூடும் என்பதற்கு பதிலாக "நீ மயிலாடுதுறையில் மாரியாத்தா கோவிலை இடிக்கப்போனாய்" என்று சொல்லி என்னைப் பிடித்து உள்ளே வைத்தார்கள்! ஆனால் எனக்கு ஜாமீன் கொடுத்தது அக்கோவிலின் டிரஸ்டி சண்முகப்படையாச்சி தான்!

அரசுக்கு தேவை நான் உள்ளே போக வேண்டும் அவ்வளவுதான். நான் எப்படி ஜெயித்து வருகிறேன் என்பது பற்றி இவர்களுக்கு கவலையில்லை! உங்களுக்கும் ஆர்.எஸ்.எஸ். அலுவலக குண்டுவெடிப்பிற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லையென்று ஜெயலலிதாவே. தனது அரசாங்கப்பூர்வமாக கடிதம் எழுதிவிட்டார்!

பார்ப்பனப் பத்திரிகைகளில் சொல்வதை கேட்டுக்கொண்ட முஸ்லிம் பத்திரிக்கைகளில் ஒன்றாவது சிறைக்கு வந்து என்னிடம் காரணம் கேட்டீர்களா?

கேள்வி - பழனிபாபா ஒரு வாய்ச்சவடால் பேர்வழி என்ற எண்ணம் மக்களிடம் உள்ளது?

பழனிபாபா - அது உண்மைத்தான். இந்து முன்னணியே அதைச் சொல்லிவிட்டது. அது எனக்கு நல்லதுதான். இனிமேல் எங்கள் மீது எந்தவொரு பிரச்சினையும் வராது பாருங்கள். வாய்ச்சவடால் என்றால் என்ன? பத்து இந்து முன்னணியினரை வெட்டிவிடவா? அதனை ஏற்றுக் கொள்வார்களா? நான் வன்முறையைத் தூண்டுகிறேன் என்கிறர்கள். நான் ஒன்றும் செய்வதில்லை என்றும் சொல்கிறார்கள், இவர்களுக்கு என்ன திட்டம்? மற்றவர்களை வேலை வாங்கிக்கொண்டு, இவர்கள் தியாகம் செய்யாமல் ஊர்வம்பு பேசிக்கொண்டு இருக்க விரும்புகிறார்கள்.

ரசூலுல்லாஹ் (ஸல்) வைப் பற்றி பேசினால் வெட்டுவோம் என்று சொல்லீருக்கிறோம். அதே போன்று ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்களையும், அவர்களது மனைவிமார்களையும் பற்றி ஆபாசமாய் படம் எடுக்கப் போகிறோம் என்று சமீபத்தில் இந்து முன்னணியினர் பேசியுள்ளார்கள். நான் சொல்கிறேன் அப்படி எடுங்கள் அதன்பின், நாங்கள் என்ன செய்கிறோம் என்று பாருங்கள். வீரமற்ற விவேகத்திற்கும் நான் தயாராக இல்லை. அதே சமயத்தில் அவர்களை நாங்கள் திட்டாமல் இருக்கமாட்டோம்!

கேள்வி - மிதவத்தில் செய்ய முடியாதத்தை தீவிரவாதத்தில் செய்ய முடியும் என்கிறீர்களா?

பழனிபாபா - மிதவாதம், தீவிரவாதம் இரண்டிற்கும் முதலில் நீங்கள் அர்த்தம் சொல்லுங்கள்.

கேள்வி - பிரச்சினைகளை அரசிடம் பேசி தீர்த்துக் கொள்ளலாமே?

பழனிபாபா - இங்கே ஒரு அரசு இருப்பதாய் நீங்கள்தான் கற்பனை செய்து கொண்டிருக்கிறீர்கள். இங்கே அரசாங்கம் இருந்திருந்தால், பிரச்சினையே வராதே? எதிர்த்தரப்பினரைக் கூப்பிட்டு அமைதியாக இருக்கச் சொன்னால், நாங்களும் அமைதியாக இருந்து விடுவோமே! இங்கே ஒரு கமிஷன் மண்டிதான் நடக்கிறது. கவர்மென்ட் இருந்திருந்தால் நாங்கள் ஏன் இவ்வ்ளவு கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறோம்? கவர்மென்ட் இருந்திருந்தால் நியாயம் நடந்திருக்க வேண்டுமல்லவா?

கேள்வி - நீங்கள் பேசிவிட்டுப் போனவுடன் சில இளைஞர்கள் உணர்ச்சிவசப்பட்டு ஏதாவது மாற்றுத்தரப்பினர்களுக்கு எதிராய் செயல்பட்டு விடுகிறார்கள் என்பது குற்றச்சாட்டு?

பழனிபாபா - எந்த ஊரில் பேச்சைக் கேட்டவுடன் இளைஞர்கள் உணர்ச்சிவசப்பட்டு கத்தியை தூக்கிக்கொண்டு போய் விடுகிறார்கள்? அப்படிச் செய்திருந்தால்தான் முஸ்லிம்கள் இப்படி சிரமப்பட்டுக் கொண்டிருக்கத் தேவையில்லையே? இவையெல்லாம் உங்களால் மிகைப்படுத்தப்பட்ட கற்பனைகள். அந்த கற்பனைகளிலேயே மிதக்கிறீர்களே தவிர, ஆதாரப்பூர்வமாக ஒன்றைகூட உங்களால் நிரூபிக்க முடியாது.

முஸ்லிம்களில் ஒரு பகுதியினர் மிகைப்படுத்தினார்களே தவிர, எந்த இந்துவும் என்னை வெறுப்பவனில்லை. இந்து முன்னணிதவிர இன்றுவரை எனக்கு ஜாமீன் கொடுத்தவர்கள் இந்துக்கள்தான், முஸ்லிம்கள் அல்ல!

கேள்வி - நீங்கள் காஞ்சியிலுள்ள சங்கரமடத்தை இடிக்கத் திட்டமிட்டுள்ளதாக அத்வானி பத்திரிக்கைகளுக்கு பேட்டியளித்துள்ளார்?

பழனிபாபா - அது பொய், அப்படிச்சொன்ன அத்வானி அது உண்மையாக இருந்தால் நடவடிக்கை எடுங்கள் என்றும் சொல்கிறார். உன்மையாக இருந்தால் இவரே டெல்லியில் உள்ள Dro-வில் கொடுத்திருக்கலாமே? சங்கரமடத்தை இடிக்கப்போவதாக சொல்லியிருப்பது மக்கள் கலை இயக்கம். ஏனென்றால் மடம் புறம்போக்கு நிலம். புறம்போக்கு நிலத்தை யார் இடித்தால் என்ன? அப்படி இடித்தால் அதற்கு நாங்கள் ஆதரவு தருவோம் என்று சொன்னோம். புறம்போக்கு நிலத்தில் கட்டப்பட்டிருந்தால் அரசாங்கமோ, பொதுமக்களோ அதை இடிக்கலாம்! ஆயிரம் வருஷத்துக்கு முன்னால் இருந்த ஜூம்மா மசூதிக்கோட்டையை இடித்தார்கள். ஐநூறு வருடங்களுக்கு முன்னால் இருந்த புராதனச் சின்னத்தை(பாபர் மசூதி) இடித்தார்கள். மடத்தை இடிக்கக் கூடாதா?

கேள்வி - மிதவாதத்திற்கும், தீவிரவாதத்திற்கும் நீங்கள் ஒரு உதாரணம் சொல்லுங்கள்?

பழனிபாபா - மிதவாதம், தீவிரவாதம் என்பதெல்லாம் எங்களுக்குத் தெரியாது. அடித்தால் திருப்பி அடிப்போம், பேசினால் திருப்பிப் பேசுவோம். அவ்வளவுத்தான்! அதற்குப் பெயர் (Defence) பாதுகாப்பு. ஆர்.எஸ்.எஸ்.-ல் என்ன திட்டம் போடுகிறார்கள் என்பதை தெரிந்து கொண்டு, அதனை முறியடித்துக் கொண்டு அவர்களோடு சண்டையிட்டுக் கொண்டிருப்பதுதான் எங்களது வேலை. அதற்காக எங்களுக்கு சொர்க்கம் கிடைத்தாலும், நரகம் கிடைத்தாலும் அதுபற்றி கவலையில்லை!

கேள்வி - சரி குத்துமதிப்பாக உங்களுக்கு வெளிநாட்டிலிருந்து எவ்வளவு பணம் வருகிறது?

பழனிபாபா - எங்களுக்கு சல்லிக்காசுகூட வெளிநாட்டிலிருந்து வருவதில்லை. சட்டப்பாதுகாப்பு நிதியென்று வருடத்திற்கு 80-ஆயிரம் ரூபாய் வருகிறது. அதுவும்கூட இந்தியாவிலிருந்து வெளிநாடு போய் வேலை செய்யும் நம் சமுதாயத்தினர்தான் அதனை அனுப்புகிறார்கள். அதனைக்கூட நாங்கள் டி.டி.யாகவோ, செக்காகவோதான் வாங்குகிறோம். கருப்புப் பணமாக வாங்குவதில்லை. நம்மவர்கலாக நினைத்துக் கொள்கிறார்கள். எங்களுக்கு வெளிநாட்டிலிருந்து பணம் வருகிறது என்பதாக!

கேள்வி - நான் ஒரு இந்திய குடிமகன், இந்நாட்டின் முன்னேற்றத்தில் நான் பங்கு வகிக்க வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு ஏற்பட்டது உண்டா?

பழனிபாபா - இல்லை... இது போன்ற எண்ணம் எனக்கு வந்ததில்லை. நான் இந்தியாவை இந்தியா என்றே பார்க்கவில்லை! இந்நாட்டின் குடிமகன் என்ற உணர்வே எணக்கு ஏற்பட்டது இல்லை. என்னுடைய ஜீவாதார உரிமைகள் முடக்கப்பட்டு விட்டது. அதனால் இந்தியாவை நேசிக்கமாட்டேன். எனக்குப் பாதுகாப்பில்லாத நாட்டை நான் மதிக்கமாட்டேன்.

இங்கு நடப்பது ஒரு மதச்சார்பற்ற ஆட்சியல்ல. ஒரு குறிப்பிட்ட ஜாதியினரின் ஆட்சி! இந்தியா எனது சகோதரத்துவக் கொள்கைகளுக்கும், மார்க்கத்திற்கும் பாதுகாப்புத்தராத வரையில், நான் இந்தியாவை ஒப்புக் கொள்ளமாட்டேன்!

கேள்வி - பம்பாயில் குண்டுவெடிப்பதற்கு ஆறு தினங்களுக்கு முன்னால், பம்பாயில் குண்டு வெடிக்கும், எங்கு வெடிக்கும், எப்பொழுது வெடிக்கும் என்பதெல்லாம் எனக்குத் தெரியும் என்று நீங்கள் பேசியது தினமலரில் வெளிவந்தது அது எப்படி உங்களுக்கு முன்கூட்டியே தெரியும்?

பழனிபாபா - எனக்கு அல்லாஹ் கனவில் வந்து சொனனார் என்று சொன்னேன். உடனே போலீஸார் சைதாப்பேட்டை கோர்ட்டில் கேஸ்போட்டு விட்டார்கள்! நான் ஐகோர்ட்டுக்கு மாற்றச்சொல்லி வழக்கு அங்கு வந்தது. நான் அங்கு சொன்னேன் 1948-ல் பாபர்மசூதியை பூட்டிவைத்து முஸ்லிம்களும், இந்துக்களும் உள்ளே நுழையக்கூடாது என்று நேரு தடையுத்தரவு பிறப்பித்தார்.

1985-ல் ஒருவன் சொந்த மச்சினன் நீதிபதியாக இருந்த கோர்ட்டில் கேஸ் போட்டு "நேற்று என் கனவில் இராமன் வந்து நாற்பது வருடமாக பூஜை இல்லாமல் இருக்கிறேன்" என்று அழுதார். அதனால் பீட்டைத் திறக்க வேண்டும் என்றான். அவன் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டார்கள்! அதே போல் எனக்கும் பம்பாயில் குண்டு வெடிப்பதைப் பற்றி என் கனவில் அல்லாஹ் வந்து சொன்னார் என்றேன். இரண்டு கேஸையும் தள்ளுபடி செய்து விட்டார்கள்!

கேள்வி - உங்களது அமைப்பினை மற்ற இஸ்லாமிய அமைப்புகளோடு இணைந்து, சமுதாயத்திற்காக இன்னும் நன்றாக பாடுபடலாமே?

பழனிபாபா - நாங்கள் அமைப்பு ரீதியாக மற்ற இஸ்லாமிய அமைப்புகளோடு கூட்டு சேர்ந்து செயல்பட்டால், இந்துக்களின் ஒட்டுமொத்த எதிப்பும் முஸ்லிம்கள்மீது பாயும். இன்று இந்துக்கள் என்ன சொல்கிறார்கள்? நமது கமிட்டிதானே எங்களுக்கு எதிராய் இருக்கிறது. மற்றவர்கள் இல்லையே என்கிறார்கள்! இந்த நிலையில் முஸ்லிம்கள் மீதான ஒரு பெரிய எதிர்ப்புணர்வை அடக்கி வருகிறோம். இது ராஜதந்திரமான போக்கு, இங்குள்ள இஸ்லாமிய அமைப்புகளோடும் நாங்கள் நேசமாகத்தான் நடந்து கொள்கிறோம். முஸ்லிம்லீக்கை தவிர, மற்றவர்களும் எங்களோடு நேசமாகத்தான் நடந்து கொள்கிறார்கள்.
seithi: www.palanibaba.blogspot.com

gravatar

அஜ்மீர் குண்டுவெடிப்பு: ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகள் சிக்கினர்


2007-ம்ஆண்டு அஜ்மீர் தர்கா வுக்கு அருகே உள்ள பள்ளிவாசலில் ரமலான் நோன்பு துறக்கும் வேளையில் குண்டுவெடித்தது. அதில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உடல்சிதறி பலியானார்கள். ஏராளமானவர்கள் படுகாயம் அடைந்தனர்.

அந்த ஆண்டின் ரமலானின் கடைசி நோன்பு நாள். விடிந்தால் நோன்புப் பெருநாள் என்ற மகிழ்ச்சியில் திளைத்திருந்த முஸ்லிம்களுக்கு மிகவும் அதிர்ச்சியாகவும் வேதனையாகவும் மக்களை மேலும் துயரத்தில் ஆழ்த்தும் வண்ணமும் அன்றைய ராஜஸ்தான் மாநிலத்தை ஆண்ட பா.ஜ.க. அரசின் நடவடிக்கைகள் அமைந்தன.

முஸ்லிம்களின் இடங்களில் முஸ்லிம்களே குண்டு வைத்தார்கள்(!) எனக் கூறி தொடர் கைதுகளை நிகழ்த்தினார்கள். அஜ்மீர் குண்டுவெடிப்புத் தொடர்பான வழக்கில் ராஜஸ்தான் முஸ்லிம் இளைஞர்கள் அடைந்த துன்பத்திற்கு அளவேயில்லாமல் போனது. எண்ணற்ற முஸ்லிம் இளைஞர்களின் கைது நடவடிக்கைகளால் ராஜஸ்தான் மாநில முஸ்லிம்கள் பீதியில் உறைந்தனர்.

இந்நிலையில் அஜ்மீர் குண்டுவெடிப்பும் ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதிகளால் நடத்தப்பட்டது என்ற உண்மை தற்போது வெளியாகி உள்ளது.

நடுநிலையாளர்கள், தொடக்கத்திலேயே கூறிவந்த குற்றச்சாட்டுகள் இதன்மூலம் நிரூபணமாகியுள்ளன.

அஜ்மீர் குண்டுவெடிப்பு தொடர்பாக தேவேந்திர தாஸ்குப்தா, சந்திரசேகர் என்ற இரண்டு ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர். இருவரையும் ராஜஸ்தான் மாநில தீவிரவாதத் தடுப்புப்படை கைது செய்தது.

இந்த இரண்டு தீவிரவாதிகள் மட்டுமன்றி மாலேகான் குண்டுவெடிப்பு பயங்கரவாதிகளான பெண் சாமியார் பிரக்யா சிங், மற்றும் ராணுவத்தில் இருந்து கொண்டு ஹிந்துத்துவா இயக்கத்திற்கு ஆதரவாக செயல்பட்டு தேசத்துரோகம் செய்த கர்னல் ஸ்ரீகாந்த் புரோகித் என்பவனுக்கும் தொடர்பு இருக்கலாம் என்றும் சந்தேகம் இருப்பதால் அவர்களும் விசாரணை வளையத்தில் கொண்டு வரப்படுவார்கள் எனத் தெரிகிறது.

மொபைல் போன் சிம்கார்டை வைத்தே குண்டுவெடிப்பு ஆர்.எஸ்.எஸ் தீவிரவாதிகளை கையும் களவுமாக (கையும் வெடிகுண்டு களுமாக?) பிடித்ததாக தீவிரவாதத் தடுப்புப் படை அறிவித்துள்ளது.

இந்த செய்தியின் மூலம் நாட்டில் நிகழும் அனைத்து கெடுதல்களுக்கும் ஹிந்துத்துவா ஆர்.எஸ்.எஸ். தீவிரவாதிகள் மட்டுமே காரணமாக இருந்திருக்கிறார்கள் என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணமாகியுள்ளது.

நாட்டில் நிகழும் அனைத்து குண்டு வெடிப்புகளுக்கும் பல்வேறு பினாமி பெயர்களில் அமைப்புகள் நடத்திவரும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினரே காரணம் என்ற தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வந்த போதிலும் கடும் நடவடிக்கை எடுக்க தாமதம் ஏன்?

2007-ல் நடந்த அஜ்மீர் குண்டு வெடிப்பை போல் பெங்களூரு, அஹ்மதாபாத், சூரத் போன்ற இடங்களில் குண்டு கண்டுபிடிக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளிவந்தன.

குறிப்பாக குஜராத்தில் வானுயர்ந்த மரங்களின் உச்சியிலும், தொலைபேசி கம்பங்களின் உச்சியிலும் தீவிரவாதிகள் குண்டு வைத்ததாகவும் செய்திகள் பரவியதோடு குண்டுகள் கண்டுபிடிப்பதற்காக புறப்பட்ட குஜராத் காவல் துறையினர் சொல்லி வைத்ததைப் போல (அல்லது அவர்கள் முன்னரே வைத்ததைப் போல) மரங்களிலும் கம்பங்களிலும் ஏறி குண்டுகளை எடுத்தனர். இது அந்த ஆண்டின் மிகச்சிறந்த காமெடி காட்சியாக சர்வதேச அளவில் வர்ணிக்கப்பட்டது.

ஆனால் இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக உத்தரப்பிரதேசத்தின் ஆசம்கார் மாவட்டத்திலுள்ள அப்பாவி இளைஞர்கள் இருவரை கைது செய்து சித்திரவதைப்படுத்திய குஜராத் ராஜஸ்தான் அரசுகள் தற்போது உண்மை குற்றவாளிகளின் முகவிலாசம் வெளிவந்துள்ளது. இந்நிலையில் இந்தியன் முஜாஹிதீன் என்ற கற்பனைக் கதைகளை தட்டிவிட்டவர்கள், அப்பாவிகளை சிறைப்பிடித்து சித்திரவதை செய்வோர் அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும். ஏனெனில் இவர்கள் குற்றவாளிகளுக்கு இணையான கொடியவர்கள் என்பதில் சந்தேகமில்லை.

gravatar

பாபர் மசூதியை இடிக்கும் போது வேடிக்கை பார்த்தார் அத்வானி: ஐபிஎஸ் அதிகாரி நீதிமன்றத்தில் சாட்சி!


பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது அதை பாதுகாக்க எந்த விதமான முயற்சிகளையும் அத்வானி மேற்கொள்ளவில்லை என்று சிபிஐ நீதிமன்றத்தில் ஐபிஎஸ் அதிகாரியும் அரசு தரப்பு சாட்சியுமான அஞ்சு குப்தா நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் மூத்த ஐபிஎஸ் அதிகாரி அஞ்சு குப்தா, அரசு தரப்பு சாட்சியாக சிறப்பு நீதிமன்றத்தில் இன்று சாட்சியம் அளித்தார்.

கடந்த 1992ம் ஆண்டு டிசம்பர் மாதம் 6ம் தேதி உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த பாபர் மசூதி இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.

இதுதொடர்பாக பாஜக மூத்த தலைவர் அத்வானி உள்பட சங்கப்பரிவார் தலைவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.​ இந்த வழக்கில் இதுவரை 8 பேர் சாட்சியம் அளித்துள்ளனர்.

இந்நிலையில் பாபர் மசூதி இடிப்புச் சம்பவத்தின் போது குப்தா,​​ அத்வானியின் மெய்க்காவலராகப் பணியாற்றிய ஐபிஎஸ் அதிதாரி அஞ்சு குப்தா இன்று ரேபரேலியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்துள்ளார்.

தற்போது டெல்லியில் ‘ரா’ பிரிவில் பணியாற்றி வரும் அஞ்சு குப்தா, பாபர் மசூதி இடிப்பு சம்பவ நாளுக்கு முன்பும் பின்பும் அத்வானியின் செயல்பாடுகள் குறித்தும், அவர் எங்கெல்லாம் சென்றார் யாரை எல்லாம் சந்தித்தார் என்ற விவரங்களையும் சிபிஐ நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

‘சர்ச்சைக்குரிய இடத்தில் சுமார் 100 பேர் (கர சேவகர்கள்) கூடியிருந்த நிலையில் அங்கு அத்வானி சென்றார். கூட்டத்தினர் மத்தியில் அவர் பேச ஆரம்பித்தார்.

ஆக்ரோஷமாகவும், உணர்ச்சி வசப்பட்டும் அவர் பேச பேச கூட்டத்தினர் மத்தியில் உணர்ச்சி வேகம் அதிகரித்து பதட்டமான நிலை உருவானதை உணர முடிந்தது’ என்று அஞ்சு குப்தா தனது சாட்சியத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அத்வானியோடு, இதர பாஜக தலைவர்களான வினய் கட்டியார், பிரமோத் மகாஜன், உமா பாரதி, சாத்வி ரிதாம்பரா, கல்ராஜ் மிஸ்ரா, ஆச்சார்யா தர்மேந்திரா, விஷ்ணு ஹரி டால்மியா, முரளி மனோகர் ஜோஷி ஆகியோரும் இருந்ததாக அஞ்சு குப்தா குறிப்பிட்டுள்ளார்.

பாபர் மசூதி இடிப்பு சம்பவம் தனது வாழ்நாளில் மிகவும் துயரமான சம்பவம் என்றும், பாபர் மசூதி இடிப்பு கட்டுப்படுத்த முடியாதபடி, இயல்பாக வெடித்த ஒரு கலவரம் என்றும் அத்வானி கூறி வந்தார்.

ஆனால் அஞ்சு குப்தா நீதிமன்றத்தில் தெரிவித்த சாட்சியங்கள் அத்வானி தெரிவித்த கருத்துக்களுக்கு முரணாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நீதிமன்றத்தில் அஞ்சு மேலும் சாட்சியம் அளிக்கையில், ‘அத்வானி மற்றும் அவருடன் இருந்த தலைவர்கள் பாபர் மசூதி இருந்த இடத்தில் இருந்து சுமார் 150 மீட்டர் தொலைவில் இருந்தார்கள்.

ரசேவகர்கள் மசூதியை இடிக்கும்போது அது இடிக்கப்படாமல் பாதுகாக்க அத்வானி உட்பட அவருடன் இருந்த தலைவர்கள் எந்த விதமான முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை.

மாறாக மசூதி இடிந்து விழுந்த போது மேலே குறிப்பிட்ட எட்டு தலைவர்களும் ஒருவரோடு ஒருவர் கைகுலுக்கி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்’ என்று கூறியுள்ளார்.

நன்றி-தட்ஸ் தமிழ்

gravatar

நான் தீவிரவாதி ஆனது எப்படி?


அழகான ஊர் பாரதிராஜா படத்தில வர்ரமாதிரி பச்ச பசேல்னு எங்கு பார்த்தாலும் பசுமை இப்படிலாம் எங்கூரப்பத்தி எழுதனும் ஆசை பொய் சொல்ரது அவ்வளவா நல்லா இல்லஇருந்தாலும்
எனக்கும் எனது நண்பர்களுக்கும் எங்கூரும் எமது மாவட்டமும் அழகு தான்.

காலேஜ் முடிஞ்சு போச்சு அடுத்து நல்ல வேலை- சேர்ந்து கைநிறையா சம்பாதிக்கனும்னு கெட்ட எண்ணம்லாம் இல்ல. சென்னையில தங்கி அழுத்து போர வரைக்கும் சென்னையே சுத்தனும், சென்னையே சுத்தனும், சென்னையே சுத்தனும், இது மட்டும் தான் எண்ணம்.

சென்னைக்கு போறதுக்கு வீட்ல காரணம் வேணும் இது சப்ப மேட்டர் எல்லாறையும் போல வேலை தேடி கைநிறையா சம்பாதிக்கப்போறோம்னோம் வேணாம்னு சொல்ற வீடு ஏது, “இரவு சேது எக்ஸ்பிரஸ் அடுத்த நாள் காலை எழும்புர் அங்கிருந்து நேரா சென்னை கடற்கரை (பீச் ஸ்டேசன்) மண்ணடி அங்கப்பன் நாயக்கன் தெருவில் மேன்ஷன்”.
வந்த நாள் பகல் முழுவதும் துாங்கிட்டு மாலை முதன் முதலில் சென்னை வந்த முதல் திட்டம் மெரினா பீச் போய் சுத்தனும் திட்டம் நிறைவேறிய உடன் மறுநாளைக்கான திட்டம் ரூமுக்கு வந்த உடனே ரெடி அது ஸ்பென்சர்க்கு ஷாப்பிங் போய் ஒன்னும் வாங்காம சாந்தில இரண்டாமாட்டம் சினிமா பார்க்கனும்.

நாங்க போட்ட திட்டப்படி எல்லாமே சரிய நடந்தது, 3மணிக்கு எழுந்து சாப்பிட்டு குளித்து 5மணிக்கு ரெடியாகி ஸ்பென்சருக்கு வந்தாச்சு முழுவதும் சுத்தி கால் வழி வந்ததுக்கு அப்புறம் சுமார் 9, 9:30 மணிப்போல திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கு வந்தோம் டிக்கெட் எடுத்து, புது பழக்கம் நம்பர் பார்த்து சீட்டை தேடி பிடித்து படத்தை பார்த்து முடித்தோம் எங்க திட்டப்படி எல்லாமே சரியா நடந்தது தியேட்டரை விட்டு வெளியே வந்தா இது சென்னையா இல்ல நம்மூரா (இது கொஞ்சம் ஓவர் தான்) ஒரு காக்கா இல்ல லாரி மட்டும் அங்கும் இங்கும் போய்க்கொண்டு இருக்க அங்கேயே ஒரு திட்டம்.

அங்கு இருந்து ரூம்மிற்கு நடந்து போவது, திட்டம் போட்டகூடனேயே சரிய நிறைவேற்றுவது எங்க கொள்கை.


நடந்து வரும் போது அண்ணாசாலை ஆரம்பத்தில் பெரியார் சிலையே கடக்கும் போது பள்ளிலே படிச்ச ஞபகம் "தொண்டு செய்து பழுத்த பழம் துாய தாடி மார்பிள் விழும்-னு" அந்த பெரியார் இவர் தானா இந்த கற்சிலை வணங்ககூடாதுனு சொன்ன அந்த பெரியாரோட கற்சிலை இது தானானு அங்கே உள்ள கல்வெட்ட பார்த்து படிச்சுக்கிட்டே நகர்ந்தா பக்கத்தில காவல் துறை அதாங்க போலீஸ் வண்டி

டே இங்க வாங்கடா ! என்ன சார்னு பக்கத்துல போனம்

பெயர் என்னடா?

முகம்மது ஜியாவுதீன்
அஹமது சர்புதீன்
முகம்மது ஃபாசில்
முகம்மது சமீம்

எங்க பெயர கேட்டதும் போலீஸ்கார் முகத்தில் சின்ன மாற்றம் ஒரு வேலை எங்க நான்கு ஒருத்தன் எங்க ஊர் 2வது வார்டு கவுன்சிலர் தம்பி அதனால பயந்துட்டாரோ.

வண்டில ஏற்றானு சொல்ல

வண்டில ஏற்னோம்

எங்க இருந்து டா வர்றீங்க?

சார் சக்கெண்ட் ஷோ சினிமா பார்த்துட்டு வர்றோம் சார் இந்தா இருக்கு டிக்கெட் சார்

யோவ் ஏட்டு அத முதல்ல வாங்குயா

அரசு கொடுத்த வயர்லஸ்ல பேசுறாரு நம்ம போலீஸ்கார்

அண்ணாசலை- நான்கு பேர தீவிரவாதினு சந்தேகத்தின் பேர்ல புடுச்சு வச்சு இருக்கோம் OVER”

நாழு பேரும் தியேட்டர்ல ஏதோ சதி திட்டம் தீட்டி இருக்காங்க அதற்கான ஆதாரம் அவங்க கையில இருக்கு OVER”

இது வரை புரியாதது:-

1)மெரினா பீச்சுக்கு போகனும் ஸ்பென்ஸர்ல சுத்தனும் சாந்தில படம் பார்க்கனும்னு எங்க திட்டத்தை போலீஸ்ல யார் சொல்லி இருப்பா?

2)ரூம்ல தான் திட்டம் போட்டோம் ஆனா போலீஸ் தியேட்டர்ல திட்டம் போட்டதா சொல்லுதே நாங்க தான் தியேட்டர்ல ஒன்னுமே பேசலையே

3)மெட்ராஸ்ல தியேட்டர்க்கு போனா தீவிரவாதினு ஏன் எங்க ஊர்ல ஒரு பயபுள்ளையும் சொல்ல-