latest

LATEST:

Grab the widget  IWeb Gator

Archives

gravatar

ஒசாமா... உலகை உலுக்கிய ஆயுதம்..


ஒசாமா...

உலகை உலுக்கிய ஆயுதம்...

உளுத்து பிழைத்தவர்களின்

உறக்கம் கெடுத்த சிம்மசொப்பனம்...


நிலத்தில் புதைத்தால்-உன்

நினைவுகள் ஒசாமாக்களை உருவாக்கிவிடுமே

நீருக்கடியில் புதைத்தானாம் அமெரிக்கன்...


நீர்த்துபோகாத உன் வீரமும்...

தோர்த்துபோகாத உன் நெஞ்சுரமும்தான்...

அமெரிக்கனை மரணத்தில்கூட அச்சம்கொள்ளவைத்துள்ளது...


உலகத்தை அடக்கியாள நினைத்தவனை

அடக்கியாண்டவன் நீ...


நீ ஒரு ஊருக்காக போராடவில்லை...

நீ ஒரு நாட்டுக்காக போராடவில்லை...

உலகதிற்ககாகவே போராடியவன்...

ஆம்

அயோக்கிய அடிமைத்தனத்தில் இருந்து

உலகை விடுவிக்க போராடியவன்...


பொன்னும் பொருளும் கொட்டிகிடந்தும்

தீனுக்காக தட்டிகளித்தவன் நீ...

இறைவனுக்காக உன் வாழ்க்கையை

இறையாக்கியவன் நீ...


உன்னைகுறிவைத்து தாக்கிய பேடிகளின்

துப்பாக்கிகளும் வெட்கி தலைகுனியவே செய்திருக்கும்...

பேடிகளின் கைகளால் மாவீரனை துளைக்கிறோம் என்று...


ஜார்ஜ் புஸ்களும் டோனி பிலேர்களும்...

ஒபாமாக்களும் கேமரூங்களும் வாழும் சமகாலத்தில்

ஒசாமாக்களும் வாழவே வேண்டும்...


உனக்காக கோடிக்கணக்கான கரங்கள் உயர்ந்துள்ளது

உனது மறுமை வாழ்வை விசாலமாக்கிட...

உன் ஷஹீதை பரிபூரனமாக்கிட...

ஏக இறையவனிடம் துஆக்கள் செய்து...


ஒசாமா...

வெற்றி வாழ்கை நடத்தி

வீரஷஹீத் பாக்கியம் பெற்ற மகிழ்ச்சியுடன் போய் வா...


உன்னைப்போல நாங்களும் சத்தியவழியில்...

அச்சமே அச்சம்கொள்ளும் வீரநெறியில் வாழ்ந்திட...

எங்களுக்காக துஆ செய்...


இறைவன் நாடினால்...

மகத்தான மறுமையில் சந்திப்போம்...

-நன்றி நிதர்சனங்கள்

gravatar

உஸாமா:ஏகாதிபத்தியத்தின் எதிர்ப்பு சின்னம்!



அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சர்வ சக்திகளுக்கு சவால் விட்டுக்கொண்டு ஒரு பத்தாண்டு காலம் உஸாமா பின் லேடன் சர்வதேச களத்தில் மறக்க முடியாத மனிதராக திகழ்ந்தார். 2001 செப்டம்பர் 11-ஆம் தேதி உலக வர்த்தக மையம் தாக்குதலுக்கு பிறகு அமெரிக்காவின் நம்பர் 1 எதிரியாக பிரகடனப்படுத்தப்பட்ட போராளியாக உஸாமா மாறினார்.அமெரிக்காவும், அதன் கூட்டணி நாடுகளும் அனைத்து சக்திகளையும் பிரயோகித்தும் உஸாமாவையோ அவருடைய முக்கிய தோழர்களையோ கண்டுபிடிக்க இயலவில்லை. அமெரிக்காவிற்கும், அதன் கூட்டணி நாடுகளுக்கும் எதிராக சர்வதேச அளவில் நடந்துவரும் வாழ்வா? சாவா? போராட்டத்தில் உலக மக்களின் அனுதாபமும், ஆதரவும் போராளிகளுக்கு தான் என்பதை உச்ச பட்ச குரலில் பிரகடனப்படுத்திய அனுபவமாக மாறியது உஸாமாவின் பங்கு.இறுதியாக நேற்று முன்தினம் இரவில் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா பத்தாண்டு கால நாடகத்தின் முடிவுரையாக உஸாமா கொல்லப்பட்ட செய்தியை பிரகடனப்படுத்தினார். பயங்கரவாதத்திற்கெதிரான போரில் பெரும் வெற்றியாக உஸாமா கொல்லப்பட்டதை பாரக் ஒபாமாவும், அமெரிக்க ஊடகங்களும் வர்ணிக்கின்றனர்.அமெரிக்காவின் அபிமான சின்னமான உலக வர்த்தக மையத்தை தகர்த்து எறிந்து ஏகாதிபத்தியத்திற்கு மிக கடுமையான பதிலடியைக் கொடுத்த போராளியாக உஸாமாவை குறித்து பலரும் கருதுகிறார்கள். இத்தாக்குதல் அமெரிக்காவிற்கு எப்பொழுதும் மாறாத வடு என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை .ஆனால், இவ்வேளையில் உலக சமூகத்தின் முன்னால் எழுகின்ற ஒரு கேள்வி என்னவெனில் ஏன் சமகாலத்தில் தங்கள் உயிரையும் அர்ப்பணித்துக் கொண்டு இறுதிவரை போராட ஆயிரக்கணக்கான மக்கள் தயாராகின்றார்கள்? என்பது தான்.ஏகாதிபத்தியத்தின் மனிதகுலத்திற்கு எதிரான கொள்கைகளுக்கு எதிராக இயற்கையாகவே எழும் பழிவாங்கும் உணர்வு தான் இங்கு போராட்டமாக வெடித்துள்ளதை நாம் மறந்துவிடக்கூடாது. போராளி இயக்கங்களை கொடூரமானவர்களாக சித்தரிப்பதற்கு போதுமான ஊடக பலம் ஏகாதிபத்திய சக்திகளிடம் உள்ளதை மறுக்கவில்லை.அவர்களை குருதி வெள்ளத்தில் மூழ்கடித்து கொலை செய்யும் ஆயுத பலமும் அவர்களிடமுள்ளது. உஸாமா பின் லேடனை வேட்டையாடுகிறோம் எனக்கூறிக் கொண்டு ஆப்கானிஸ்தானிலும், பாகிஸ்தானிலும் லட்சக்கணக்கான நிரபராதிகளை ஏகாதிபத்திய சக்திகள் கொன்று குவித்தன. இத்தகைய இரத்தக்களரிகள் ஏகாதிபத்தியம் நிகழ்த்திவரும் கொடூரங்களுக்கு ஆதாரங்களாக திகழ்கின்றன.உஸாமா பின்லேடன் கொலை செய்யப்பட்டதன் மூலம் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டம் முடிவுக்கு வந்துவிடாது .இது அமெரிக்காவிற்கும் தெரியும். காரணம், அநீதிகளின் மீது கட்டியெழுப்பப்பட்ட ஏகாதிபத்தியம் என்ற உலக ஒழுங்கிற்கு எதிரான போராட்டம் தான் இங்கு நடைபெற்றுவருகிறது. இரத்த சாட்சியாக மாறிய உஸாமா அந்த போராட்டத்தின் ஒரு சின்னம் மட்டுமே!
அ.செய்யது அலீ.
source: thoothuonline