latest

LATEST:

Grab the widget  IWeb Gator

Archives

gravatar

அலஹாபாத் உயர்நீதி மன்ற நீதிபதிகள் நேர்மையற்றவர்கள்: சுப்ரீம் கோர்ட் கண்டனம்!



மத உரிமைக்கும், சொத்துரிமைக்கும் விரோதமாகவும், உலக மக்களுக்கு அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் அளித்த அலஹாபாத் உயர்நீதி மன்றத்தின் பாபர் மசூதி குறித்த கட்டப் பஞ்சாயத்து தீர்ப்பு நடுநிலையாளர்களின் கடுமையான கண்டனத்திற்கு ஆளானது. தற்போது, அலஹாபாத் உயர் நீதி மன்ற நீதிபதிகள் குறித்து சுப்ரீம் கோர்ட் கடுமையான கண்டனத்தை பதிவு செய்துள்ளது.

சுப்ரீம் கோர்ட் டிவிஷன் பெஞ்ச், உத்தர பிரதேச மத்திய சன்னி வக்ஃபு வாரியம், ஒரு நிலம் விஷயமாக தொடர்ந்த வழக்கில், கடந்த 26.11.2010 வெள்ளியன்று பரபரப்பான தீர்ப்பினை வழங்கியது. அந்த தீர்ப்பில், அலஹாபாத் உயர் நீதி மன்ற நீதிபதிகள் குறித்து தங்களுக்கு பல புகார்கள் வந்த வண்ணம் உள்ளன; அலஹாபாத் உயர் நீதி மன்ற நீதிபதிகளுள் பலர் நேர்மையற்றவர்கள்; தங்களுக்கு வேண்டியவர்களுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கி வருகின்றனர்; இந்திய சட்டத்துறை குறித்த பொதுமக்களின் அடிப்படை நம்பிக்கையை தகர்க்கும் வண்ணம் அதிர்ச்சியளிக்கக்கூடிய பல தீர்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன என்று கடுமையாக சாடியுள்ளனர்.

மேலும், அலஹாபாத் உயர்நீதி மன்றத்தை களையெடுத்து சுத்தம் செய்ய வேண்டியுள்ளது; நீதிபதிகள் குறித்து வரும் புகார்கள், அவர்கள் இறையாண்மைக்கு எதிராக செயல்படுவதை உறுதிப்படுத்தியுள்ளது என்று நீதிபதி மார்க்கண்டேய கட்சு மற்றும் நீதிபதி கியான் சுதான் மிஷ்ரா ஆகியோர் தீர்ப்பளித்துள்ளனர். கடுமையான நடவடிக்கை எடுக்கக்கோரி அலஹாபாத் உயர்நீதி மன்ற தலைமை நீதிபதிக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

காவிகள் கடுமையாக ஊடுறுவி உள்ளனர் என்பதற்கு தற்போதைய சுப்ரிம் கோர்ட்டின் தீர்ப்பு சான்றாக அமைகின்றது. மசூதியை பாபர் தான் கட்டினார் என்பதற்கு ஆதாரம் கேட்ட நீதிமன்றம், ராமர் அங்கு தான் பிறந்தார் என்பதற்கு நம்பிக்கையை ஆதாரமாக ஏற்று, அநியாய தீர்ப்பினை அளித்தது இதே அலஹாபாத் உயர் நீதி மன்றம் தான். அலஹாபாத் உயர்நீதி மன்றத்தின் இலட்சணம் தற்போது சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளால் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளது.

“… ஒரு சமுதாயத்தின் மீதுள்ள பகை நீங்கள் நீதியாக நடக்காமலிருக்க, உங்களைத் தூண்ட வேண்டாம். நீதியாக நடங்கள்! அதுவே இறையச்சத்திற்கு நெருக்கமானது. … (குர்ஆன் – 5:8) ”

இதே போன்றே, பாபரி மஸ்ஜித் சட்ட விரோத தீர்ப்பை சுப்ரீம் கண்டித்து, தானாகவே முன்வந்து அவ்வழக்கை மறு விசாரணைக்கு உட்படுத்தி, முஸ்லிம்களுக்கு நீதி வழங்கி, இந்திய இறையாண்மை மீது சாதாரண குடிமக்களின் நம்பிக்கையை மெய்ப்படுத்த வேண்டும் என்பதே அனைத்து தரப்பு மக்களின் பேரவா. சுப்ரீம் கோர்ட் செய்யுமா?