latest

LATEST:

Grab the widget  IWeb Gator

gravatar

வல்லரசு ஆகப்போகுதாம் வெட்கம் கெட்ட இந்தியா !!


என்கவுண்டர் கொலைகளை நிகழ்த்தும் அதிகாரிகளுக்கு மரணத் தண்டனையை விதிக்க வேண்டும் என அண்மையில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில் கூறியிருந்தது.

பாலியல் வன்புணர்வு கொலையை விட கொடிய குற்றம் என உச்சநீதிமன்றம் தெரிவித்தது. கொலை ஒரு மனிதனை ஒருமுறை மட்டுமே கொலைச் செய்யும், ஆனால் பாலியல் வன்புணர்வு பாதிக்கப்பட்டவரை பல முறை கொலைச் செய்கிறது.

சட்டத்தின் அடிப்படையிலோ, மனித நேயத்தின் அடிப்படையிலோ முற்றிலும் ஒப்புக்கொள்ள வியலாத இத்தகைய கொடூர குற்றங்கள் ஜம்மு-கஷ்மீரில் அரசு சட்ட அந்தஸ்துடன் நடத்திவருகிறது. பல ஆய்வுகளும், விசாரணைகளும் இதனை உறுதிச் செய்துள்ளன. தற்பொழுது ஜம்மு-கஷ்மீர் மாநிலத்தின் மனித உரிமை கமிஷனே கூட்டுப் படுகொலைகளுக்கு ஆதாரங்களுடன் அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.

கஷ்மீர் மாநிலத்தில் 38 கல்லறைகளில் 2156 அடையாளம் காணமுடியாத இறந்த உடல்கள் அடக்க செய்யப்பட்டுள்ளதை மனித உரிமை கமிஷன் கண்டறிந்துள்ளது. இந்திய ராணுவம் கடுமையான மனித உரிமை மீறல்களை புரிந்துவருவதாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணை அரசு அதிகார வர்க்கத்தின் பயங்கரவாத முகத்தை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.

அநியாயமான படுகொலை, வீணாக கைதுச் செய்வது, எவ்வித காரணமுமின்றி சிறையில் அடைத்தல், சித்திரவதைகள், கொடுமைகள் இவையெல்லாம் கஷ்மீரில் பல வருடங்களாக சர்வ சாதாரணமாக நடந்துவருகிறது. அடையாளம் தெரியாத உடல்களுடன் 2730 பேரை கூட்டமாக புதைத்துள்ளனர் என்பதை மாநில மனித உரிமை கமிஷனின் சிறப்பு புலனாய்வு குழு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

பாரமுல்லா, பந்திபூர், குப்வரா ஆகிய மாவட்டங்களிலிருந்து மட்டும் கிடைத்த புள்ளிவிபரங்கள் தாம் இவை. மத்திய-மாநில அரசுகள் கஷ்மீருக்கு செய்யும் மிகப்பெரிய துரோகத்தின் சித்திரம்தான் இவை. தீவிரவாதி, பயங்கரவாதி, ஊடுருவல்காரன் எனக்கூறி எவரையும், எப்பொழுதும் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற சூழல்தான் கஷ்மீரில் நிலவுகிறது. இது ஒரு பயங்கரமான சூழலாகும்.

இறுதியாக கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி இந்திய ராணுவம் ஒருவரை சுட்டுக் கொன்றது. அவர் பாகிஸ்தானைச் சார்ந்த லஷ்கர் போராளி இயக்கத்தின் பிராந்திய கமாண்டர் அபூ உஸ்மான் என ராணுவம் தெரிவித்திருந்தது. ஆனால், உண்மையில் ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டவர் ஒரு கஷ்மீரி ஹிந்து ஆவார்.

1989-ஆம் ஆண்டு முதல் 10 ஆயிரம் கஷ்மீர் மக்கள் காணாமல் போயுள்ளனர். ஆயிரக்கணக்கானோரை கஸ்டடியில் எடுத்து சித்திரவதைக்கு ஆளாக்குகின்றனர். இவ்வாறு கொடுமை இழைக்கப்படுவோர் 20 வயதிற்கும் 30 வயதிற்கும் இடைப்பட்டவர்கள் ஆவர். மக்களை முழுவதும் பீதியில் ஆழ்த்த தடை உத்தரவு உள்ளிட்ட தந்திரங்களை ராணுவமும், போலீசும் கையாழுகின்றன.

பெண்களுக்கு கொடுமை இழைக்கப்படுவது பல இடங்களிலும் வழக்கமாகிவிட்டது. பாலியல் வன்புணர்வு என்பது மக்களை அடக்கி ஆளுவதற்கான ஆயுதமாக மாறிவிட்டது என ரூர்த்வா பல்கலைக்கழக பேராசிரியரான டாக்டர்.மைதி கூறுகிறார். செஞ்சிலுவை சங்கத்தின் அறிக்கையொன்றும் இதனையே கூறுகிறது.

உலகிலேயே அதிகமாக பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவது கஷ்மீரி பெண்கள்தாம் என ’டாக்டர்ஸ் வித்அவுட் பார்டர்ஸ்’ என்ற ஆய்வில் வெளியாகியுள்ளது. ஒவ்வொரு இரு தினங்களும் மூன்று வீதம் பெண்கள் பாலியல் வன்முறைக்கு பலியாவதாக பிரிட்டனில் ஒரு இணையதளம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

கலிஃபோர்னியாவில் பேராசிரியராக பணியாற்றும் இந்தியரான அங்கனா சாட்டர்ஜி கஷ்மீரில் அரச பயங்கரவாதத்தைக் குறித்து விரிவாக ஆய்வுச் செய்துள்ளார். மக்களை அடக்கி ஒடுக்க ராணுவத்திற்கு வாய்ப்புகள் கிடைப்பதற்காக கஷ்மீரில் தீவிரவாத-ஊடுருவல்களை குறித்து ஊதிப் பெருக்கிய பொய்கள் பரப்புரைச் செய்யப்படுவதாக அறிக்கை கூறுகிறது.

சுதந்திர இந்தியா அதன் குடிமக்கள் மீது இவ்வளவுதூரம் கொடுமை இழைத்த பிறகும் மக்கள் எதிர்ப்பு தெரிவிக்காமல் இருப்பதன் காரணம் ‘தீவிரவாதம்’ என்ற லேபலை எதிர்ப்பவர்கள் மீது சுமத்துவதாகும். இதனையும் முறியடித்து விசாரணையை மேற்கொண்ட அங்கனா சாட்டர்ஜி உள்ளிட்ட பலரையும் தொந்தரவு அளித்து ஆய்விலிருந்து பின்வாங்கச் செய்வதற்கான முயற்சிகளை அரசு செய்கிறது.

கடந்த ஆண்டு அமெரிக்காவைச் சார்ந்த பேராசிரியர் ரிச்சார்ட் ஷாப்பிராக்கிற்கு கஷ்மீர் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. மகளிர் எம்.பிக்களின் குழுவினர்கள் கூட மன்ஸ்காம் போன்ற சில பகுதிகளுக்கு செல்ல அனுமதி மறுக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இவ்வளவு நெருக்கடியிலும் ஹியூமன்ரைட்ஸ் வாட்ச், சர்வதேச தீர்ப்பாயம், செஞ்சிலுவை சங்கம், ஆம்னஸ்டி இண்டர்நேசனல் உள்ளிட்ட பல்வேறு மனித உரிமை அமைப்புகள் பல வேளைகளிலும் கண்டறிந்த உண்மைகள் நம்மை வெட்கமடையச் செய்கின்றன. ஆட்சியாளர்களைப் போலவே தேசிய மனித உரிமை கமிஷன் மற்றும் மகளிர் கமிஷன் ஆகியனவும் கஷ்மீர் விவகாரத்தில் கையாலாத தன்மையை வெளிப்படுத்துகின்றன.

மோதல் படுகொலைகளை ஒரு கட்டத்தில் நியாயப்படுத்த முயன்றார் முன்னாள் தேசிய மனித உரிமை கமிஷனின் தலைவர். குடும்ப பாரம் ஒருபுறம், மன அழுத்தம் மறுபுறம் என காணாமல் போன கணவனை எண்ணி அவதியுறும் கஷ்மீரின் ‘அரை விதவைகளை’ (காணாமல் போன கணவர் உயிரோடு இருக்கின்றாரா? இறந்துவிட்டாரா? என்று தெரியாமல் துன்பத்தில் உழலும் கஷ்மீர் பெண்களுக்கு ‘அரை விதவை’ என பெயரிட்டுள்ளனர்) சந்தித்து ஆறுதல் கூறக்கூட தேசிய மகளிர் கமிஷனால் இயலவில்லை.

கஷ்மீர் இன்று தீவிரவாதத்தின் சின்னமாக சித்தரிக்கப்படுகிறது. ஆனால், உண்மையில் தேசத்திற்கு அவமானத்தை தேடி தரும் ராணுவத்தின் அக்கிரமங்கள் நிறைந்த மாநிலமாகவே காட்சி தருகிறது. ஒரு மாநிலத்தின் மக்களை அவதிக்கும் கொடுமைக்கும் ஆளாக்கிவிட்டு நாம் எவ்வாறு உலகத்தின் முன்னால் தலை உயர்த்தி நிற்க இயலும்? அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிட்டால் கஷ்மீரின் நிலைமை இன்னும் மோசமாகும். ராணுவத்திற்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரங்களை வாபஸ்பெற வேண்டும் என்ற பல ஆண்டுகளாக முன்வைக்கப்படும் கோரிக்கை இன்னமும் வெறும் வார்த்தையளவிலேயே உள்ளது.

கஷ்மீர் மக்களின் துயரத்தை துடைக்க விரும்பினால் அரசு முதலில் செய்யவேண்டியது ராணுவத்தை அங்கிருந்து வாபஸ் பெறச் செய்வதாகும். கஷ்மீரில் சுமூகமான அரசியல் மற்றும் நல்லிணக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள ராணுவம் தடையாக உள்ளது.
ஜனநாயக நாடு என பெருமைக்கொள்ளும் நாம் ஒரு தேசத்தின் கொள்கை முடிவுகளை ராணுவத்திற்கு விட்டுக் கொடுப்பது வெட்ககேடானது. இது பெரும் துயரத்தை ஏற்படுத்தவே வழிவகைச் செய்யும்.

கட்டுப்பாடற்ற அதிகாரங்களை ராணுவத்திற்கு வழங்கியதன் விளைவுதான் மாநில மனித உரிமை கமிஷன் கண்டறிந்த உண்மைகள். இனிமேலும் கஷ்மீரின் கட்டுப்பாட்டை ராணுவத்திடம் ஒப்படைத்து கஷ்மீரை ஆபத்தான பள்ளத்தாக்காக மாற்றிவிடாதீர்கள். தேசத்திற்கு அவமானத்தை ஏற்படுத்திய கொடுங்கோலர்களை கண்டறிந்து தண்டனை அளிக்க அரசு முன்வர வேண்டும். இல்லையெனில் ஜனநாயகம், மனித நேயம் இவற்றிற்கெல்லாம் என்னதான் பொருள்

gravatar

Great article with excellent idea! I appreciate your post. Thanks so much and let keep on sharing your stuffs.
Tamil News | Latest Tamil News | Tamil Newspaper